Google Website Translator Gadget

Showing posts with label Science. Show all posts
Showing posts with label Science. Show all posts

சிக்குன் குன்னியா நோய்க்கு தடுப்பூசி கண்டுபிடிப்பு

Thursday, August 18, 2011

நுளம்புகள் மூலம் பரவக்கூடியதும் அது காய்ச்சாலாக இருந்தாலும் கை, கால்கள் இயக்கத்தை முடக்கக்கூடிய ஒரு காய்ச்சலாக இது காணப்படுகின்றது. இது இலங்கையில் பல தடவை பரவி மக்களை பீதிக்குள்ளாக்கி உள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த காய்ச்சாலில் நானும் ஒரு முறை பாதித்துள்ளேன். கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் இந்தச் சம்பவம் நடைபெற்றது. அதே போல் இந்தியாவையும் இது தாக்கியது. 

நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சினைக்கு இப்போது தீர்வு காணப்பட்டுள்ளது. அமெரிக்க விஞ்ஞானிகள் இதற்கான தடுப்பூசி கண்டுபிடித்துள்ளார்கள்.

இந்த மருந்தினை அமெரிக்காவின் டெக்ஸாஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகளால் தான் இதற்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  அதாவது மரபணு மாற்றம் செய்யப்பட்ட சிக்குன் குன்னியா வைரசைக் கொண்டு இந்த மருந்து தயாரிக்கப்பட்டுள்ளது. இதனை எலிக்குப் பயன்படுத்தி பரிசோதிக்கப்பட்டுள்ளது, அது வெற்றி கண்டுள்ளது. ஆனால். அதற்கான மருத்துவ அங்கீகாரம் வழங்கப்படவில்லை.

எனவே, எலிக்கான பரீசோதனை மாத்திரமே நடைபெற்றுள்ளது அதனை மனிதனுக்கு செலுத்தி இந்த பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என இந்த விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இதற்கான தயாரிப்புச் செலவும் குறைவு என டெக்ஸாஸ் பல்கலைக்கழ விஞ்ஞானி ஸ்கேட் வீவர் தெரிவித்துள்ளார்.





READ MORE - சிக்குன் குன்னியா நோய்க்கு தடுப்பூசி கண்டுபிடிப்பு

 
 
 

Followers

Subscribe!