Google Website Translator Gadget

Showing posts with label தொழில்நுட்பம். Show all posts
Showing posts with label தொழில்நுட்பம். Show all posts

இணையத்தில் தேட புதிய தேடுதல் பொறி அறிமுகம்

Tuesday, September 6, 2011


நாங்கள் இதுவரை காலமும் அநேகமானவர்களுக்கு பரிட்சியமான தேடுதல் பொறியாக இருந்து வந்தது கூக்கிள் தேடுதல் பொறியாகும், யாகூ என நாங்கள் குறிப்பிட்டு சிலவற்றைச் சொல்லலாம் ஆனால் இன்று புதிய தேடுதல் பொறி ஒன்றை நான் சொல்லப் போறேன். இதனைப் பயன்படுத்திப் பாருங்கள் இதன் வித்தியாசத்தை உங்களால் உணரமுடிகின்றதா? இல்லையா என்பதை

இந்த தளத்தின் விசேட அம்சம் என்னவெனில் யாஹூ,ஆஸ்க், விக்கிபீடியா, ஆன்சர்ஸ், யூடியூப்அமேசன் போன்ற அனைத்தையும் ஒரே இடத்தில் தேட வழி செய்கின்றது ஒரு எறியில் பல மாங்காய் வீழ்த்துவது போல் தான் இதுவும் செயற்படுகினறது. அத்துடன் நாங்கள் தேடுவதற்கான வாத்தைகளை வழங்கினால் அது அதிகமாக எதில் தேடுதல் மேற்கொள்ளப்பட்டது என்பதை தெளிவாகச் சொல்லிவிடும் ஆற்றல் கொண்டது. அதாவது அதனை நாங்கள் ஆங்கிலத்தில் Suggestion Keyword என அழைப்போம். தேவையானவற்றை நாங்கள் சுட்டியினால் சுட்டி விரிவாக ஆராய்ந்து பார்க்கலாம். இந்த தளமானது விரிவான தேடுதல் நடவடிக்கைக்கு சிறந்த தேடுதல் பொறியாகும்.


அந்த தளத்தின் விலாசம் இங்கே கிளிக் பண்ணவும் 


பிடித்திருந்தால் வாக்களித்து என்னை ஊக்கப்படுத்துங்கள்

READ MORE - இணையத்தில் தேட புதிய தேடுதல் பொறி அறிமுகம்

கறுப்பு ஓட்டை நட்சத்திரத்தை விழுங்கும் காட்சி (காணொளி இணைப்பு)

Saturday, August 27, 2011


அண்வெளியில் பற்பல அதிசயங்கள் நாளாந்தம் நடந்த வண்ணம் தான் இருக்கின்றன. அவைகள் எல்லாம் மனிதனுக்கு தெரிவதில்லை. அவ்வாறு தெரிந்தாலும் அதனை அறிவிக்கவும், அறிந்து கொள்ளவும் வாய்ப்புக்கள் கிடைக்காமல் போகலாம்.

இருந்தும் ..................................

இந்த விண்வெளியில் கறுப்பு ஓட்டைகள் நட்சத்திரங்களை விழுங்கும் சந்தர்ப்பங்களும் உண்டு என தெரிவிக்கப்படுகின்றன.
இவை தொடர்பாக தற்போது தான் முதல் முறையாக தெரியப்படுத்தியுள்ளார்கள் விஞ்ஞானிகள்.
அவ்வாறு நடைபெறும் அந்த அரிய காட்சியை இதுவரையில் நாம் கண்டெதில்லை எனலாம்.



இந்த நிகழ்வானது 39லட்சம் ஒளி ஆண்டுக்கு அப்பால் நடைபெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் அதனை ஆய்வாளர்கள் நாசாவில் உள்ள நுண்ணோக்கி மூலம் படம் பிடித்துள்ளார்கள் என்றால் பாருங்கள் எவ்வளவு துாரம் மனிதனின் ஆளுமை உள்ளது என்று.
ஆச்சரியப்படக்கூடிய வகையில் அவர்கள் தீவிரமான எக்ஸ்ரே ஒளி வீச்சுகளையும் பார்த்தனர். அப்போது நட்சத்திர மண்டலத்தில் சூரியன் போன்ற மிகப் பெரிய நட்சத்திரம் பெரும் கறுப்பு ஓட்டையில் மூழ்குவதையும் அவர்கள் கண்டுபிடித்தனர்.


இந்த வகையான பெரும் கறுப்பு ஓட்டைகள் கவர்ந்து இழுக்க கூடிய ஈர்ப்பு சக்தியை அதிகம் கொண்டதாகும். அந்த கறுப்பு ஓட்டைகள் ஈர்த்த நட்சத்திரத்தை மெல்ல சாப்பிட்டு விடும் தன்மை கொண்டது ஆகும்.
இதனை அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழக பேராசியர் டேவிட் பர்ரோஸ் தலைமையிலான குழு இந்த அரிய நிகழ்வை படம்பிடித்து எங்கள் போன்றவர்கள் பார்வைக்காக தந்துள்ளார்கள் என்றால் அதனை நாங்கள் பாராட்டத்தான் வேண்டும்.



READ MORE - கறுப்பு ஓட்டை நட்சத்திரத்தை விழுங்கும் காட்சி (காணொளி இணைப்பு)

Facebook க்கின் புதிய பாதுகாப்பு அரன்கள் அறிமுகம்

Thursday, August 25, 2011

இன்றைய சமூக தளங்களில் பேஸ்புக் முதலாம் இடத்தைப்பிடித்துள்ளது. ஏனெனில் அதற்கான பயனாளர்கள் நாளுக்கு அதிகரித்த வண்ணமே உளள்னர். இதன் பயனாக அவர்கள் செயற்பாடுகளும் மாற்றமடைந்து காணப்படுகின்றது, இவ்வாறான நிலையில் பல்வேறு பாதுகாப்பு அரண்கள் அமைக்க வேண்டிய தேவை அதற்குள்ளது எனலாம்.

இதன் முதல் கட்டமாக ஒருவர் யாருடன் படங்களை பகிர்ந்து கொள்வது பற்றிய தகவல்களயும் எங்களுக்கு புரியவைக்கின்றது எனலாம். இவை தொடர்பான பல்வேறுபட்ட விடயங்களில் மாற்றங்களை செய்துளள்து. அவற்றினை இரண்டு பகுதிகளாக இடம்பெற்றுள்ளன.
ஒன்று கணக்குகளில் இரகசியப் பாதுகாப்பு மாற்றங்கள் மற்றையது, பயனாளர்கள் எவ்வாறு தமது உள்ளடக்கங்களைப் பகிர்ந்து கொள்வது தொடர்பா மாற்றங்கள்.
தற்போது இந்த profile கட்டுப்பாடுகள் பக்கத்தின் வலதுபக்கத்தில் தடித்த எழுத்துக்களில் காணப்படும்.
கடந்த காலங்களில் ஒருவர் உங்களது படங்களை அல்லது இசைகளை Privacy Settings பக்கத்தினூடாகச் சென்றே பார்க்கமுடியும்.
மேலும், தற்போது இந்தச் சரி செய்தல்கள் எல்லாம் ஒவ்வொரு பயனாளர் பக்கத்திலும் நீங்கள் உங்களது திருத்தங்களைச் செய்யும்போது வலது பக்கத்தில் தோன்றும்.
புதிதாக View Profile As எனும் அமைப்பையும் Facebook தனது பக்கத்தில் கொண்டுவரத் தீர்மானித்துள்ளது.
இதன் மூலமாக உங்கள் நண்பர் ஒருவர் உங்களது பக்கத்தைப் பார்க்கும்போது எப்படியிருக்குமோ அவ்வாறே உங்களையும் பார்க்க அது உதவுகிறது.
எவ்வாறாயினும் ஆனால், இது நீங்கள் ஒவ்வொரு தடவையும் உங்களது பக்கத்திற்குள் செல்லும்போதும் வலதுபக்க மேல் மூலையில் தோன்றும் வாய்ப்புள்ளது.
புதியவற்றில் தற்போது பயனாளர்களால் யாராவது தம்மைப் பார்க்கமுன்னரே ஏற்றுக்கொள்ளவோ மறுக்கவோ முடிகின்றது. இது படங்கள், இடங்கள் மற்றும் விளம்பரங்களையும் உள்ளடக்குகின்றது.
அதிகளவான நண்பர்களை இணைத்துக்கொள்ளுதல் அதாவது நீங்கள் ஒரு Facebook நண்பர் அல்லாமல் இருந்தாலும் கூட யாரையுமே இணைத்துக் கொள்ளலாம். இது இன்னும் பலரை இணைத்துக் கொள்ளச் வாய்ப்பளிக்கின்றது.
இதனால் ஒருவருடன் ஓர் அனுபவத்தைப் பகிர்ந்துகொள்வதானது அவர் Facebook  நண்பராகத்தான் இருக்கவேண்டும் என்பதில்லை என்பதை Facebook தெரிவிக்கின்றது.
ஆகவே, IOS மற்றும் Android பிரயோகங்களிற்கான ஐகொன்கள் இங்கு அவசியமில்லாமல் போவதால் இவை அப்புறப்படுத்தப்படுகின்றது.
அதற்கு பதிலாக புதிதாக Nearby எனும் ஐகொன் காணப்படுகின்றது. அத்துடன் பயனாளர்களால் பட அல்பங்களிற்கு அல்லது தனிநபர் படங்களுக்கு அல்லது வீடியோக்களுக்கும் இடங்களைக் சுட்டிக்காட்ட முடியும்.

மேலும், Publisher சட்டத்தில் இடங்களையும் நேரடியாக இணைக்கலாம். உலாவியிலிருந்து அல்லது கைத்தொலைபேசி மென்பொருட்களிலிருந்து நீங்கள் ஓர் இடத்தைக் சுட்டிக்காட்டலாம்.
இதன் பயனாக மேலும், இத்துடன் GPS இல் குறிக்கமுடியாத குறுகிய தூரங்களிலுள்ள இடங்களின் அமைவிடத்தினையும் தெரியப்படுத்தலாம்.
Public, Public என வித்தியாசங்காண்பதற்காக மாற்றப்பட்டுள்ளது.
இறுதியான மாற்றமாக ஒருவர் தன்னை Facebook உள்ளடக்கத்திலிருந்து அகற்ற முயலும்போதும் அதிக தெரிவுகளை வழங்குகின்றது. இதில் 3 தெரிவுகள் காணப்படுகின்றன.
ஒன்று, உங்களது படத்தினை அகற்றலாம், இரண்டு படத்தை ஏற்றியவரை அப்படத்தை அகற்றுமாறு வேண்டலாம், மூன்று அந்நபரை Facebook  இலிருந்து தடுக்கலாம்.
இந்த மாற்றத்திற்கு வரவேற்புகளும், எதிர்ப்புக்களும் காணப்படுகின்றன என்பதை நான் சுட்டிக்காட்டுதல் பொருத்தம்.








READ MORE - Facebook க்கின் புதிய பாதுகாப்பு அரன்கள் அறிமுகம்

முழு நீள திரைப்படங்களை MoviePlex யில் பார்வையிட முடியும்

Wednesday, August 24, 2011

2 வாரங்களுக்கு முன்னர் கூக்கிள் நிறுவனம் தனது யூடியுபில்(Youtube) புதிய இந்தியத்திரைப்படங்களை இணையத்தின் ஊடாக பார்வையிடுவதற்கு Box Office என்ற புதிய சனலை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதில் பலரால் ஏற்றப்பட்ட முழுநீளப்படங்களாக இருந்தாலும் அவைகளை நாங்கள் பார்வையிடமுடியும். இந்த வசதியான மாதம் ஒருமுறை ஒவ்வொன்றாக பாக்கும்படியாக வந்தது. மற்றோரு பிரபல தளமான யாகூம் (Yahoo) தன் பங்குக்கு என்ன செய்யலாம் என யோசனை செய்து அது ஒரு வசதியை கொண்டுவந்துள்ளது. அது தான் அந்த MoviePlex யாகூவின் புதிய சேவையின் ஊடாக முழுநீள பாலிவுட் இந்தித் திரைப்படங்களை கணினியில் கண்டு கழிக்க முடியும்.
கூகுளின் BoxOffice மூலம் மாதத்திற்கு ஒரு புதிய படத்தை மாத்திரமே வெளியிடுவார்கள். ஆனால் இதில் உள்ள படங்களை எப்போது வேண்டுமானாலும் பார்க்க முடியும். தற்போது எட்டு திரைப்படங்கள் உள்ளது.
மேலும் பல படங்கள் விரைவில் இணைக்கப்பட உள்ளன. ஆனால் இதில் உள்ள குறை என்னவென்றால் இதில் இணைக்கப்படும் திரைப்படங்கள் Standard Version இல் இருப்பதால் பிளாஷ் வசதி இல்லாத கருவிகளில் பார்க்க இயலாது என்பதே. ஐபேடு மற்றும் சில மொபைல்களில் பிளாஷ் வசதி இருப்பதில்லை. கணணியில் பார்ப்பதற்கு சிக்கல் ஏதும் இல்லை.
READ MORE - முழு நீள திரைப்படங்களை MoviePlex யில் பார்வையிட முடியும்

மனித மூளைக்கு சமனான ”சிப்” தொழில்நுட்பம் (பட காணொளி)

Sunday, August 21, 2011

தொழில்நுட்ப புரட்சியில் மனிதன் இன்று உச்சியில் நிற்பது நான் சொல்லியோ அல்லது நீங்கள் சொல்லியே தெரிய வேண்டிய தேவைப்பாடுகள் இல்லை. இன்று நாங்கள் விதவிதமான தொழில்நுட்ப கடலில் மிதந்து கொண்டிருக்கும் நிலையில் உலகில் மிகப்பிரபலமான IBM எனப்படும் கம்பனி புதியவகையான மனித மூளைக்கு (cognitive computing) சமனான  சிப் ஒன்றை கண்டுபிடித்து உருவாக்கியுள்ளார்கள்


இச் 'சிப்' ஆனது மனிதர்களின் மூளையைப் போல தரவுகளை செயன்முறைப்படுத்தக்கூடியன.
சிக்கல் நிறைந்த தரவுகளை உணர்தல், சூழலை உணர்தல், இலக்குகளை அறிந்துகொள்ளல், சுற்றுவட்டாரத்துடன் தொடர்புகொள்ளல், உரிய பதிலை வழங்குதல் ஆகியவை என இதனை தயாரித்த நிறுவனம் கருத்து தெரிவித்துள்ளது பிரபல தொழில்நுட்ப நிறுவனமான ஐபிஎம் என்பது குறிப்பிடத்தக்கது. செயற்கையான நுண்ணறிவினை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ச்சிகள் திகழுமென என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதற்காக 6வருடங்களாக 100 ஆராய்ச்சியாளர்கள் பங்கு பற்றி அவர்களுடைய இலக்கினை அடைந்துள்ளனர். 41 மில்லியன் நிதியின் அமெரிக்காவின் பாதுகாப்பு மேம்பாட்டு ஆராய்ச்சிக்கான திட்ட முகவர் நிலையமும் IBM அமைப்பும் அனுசரணை வழங்கியுள்ளது என்பதையும் இங்கு குறிப்பிட்ட வேண்டும். 









READ MORE - மனித மூளைக்கு சமனான ”சிப்” தொழில்நுட்பம் (பட காணொளி)

தரமான Nokia Brand என எவ்வாறு பரிசோதிப்பது ?

Saturday, August 20, 2011


இன்று எத்தகையான  வகையான போன்கள் வந்தாலும் அவைகள் யாவும் தரமான நோக்கியா போனுக்கு ஈடாகாது என்பது நான் உங்களுக்குச் சொல்லித் தெரிய வேண்டிய தேவையில்லை.




சீனா நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பல்வேறுபட்ட வியாபார குறியிடுகளுடன் நாளாந்தம் வந்த வண்ணமே உள்ள அவைகள் பல வசதிகள், மற்றும் பல்வேறு வகையான வடிவமைப்பு, வித்தியாசமான தொழில்நுட்பம் என்றெல்லாம் நாங்கள் சொல்லிக் கொண்டு போகலாம்.

பணத்தைக் கொடுக்கும் போது தரத்தைப்பார்க்க வேண்டுமல்லவா, அதற்குத்தான் உங்களுக்கு தரப்போகும் இந்த குறிப்பினைப்பயன்படுத்தி நீங்களே உங்களுடைய போனை சரிபார்த்துக் கொள்ள முடியும் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

முதலில் உங்களுடைய மொபைலை பரிசோனை செய்ய *#06#  என்று டயல் பண்ணுங்க அந்த மொபைல் உற்பத்தி செய்யப்பட்ட விபரம் தொடர்பாக 15 இலக்கங்களைக் கொண்ட நம்பர் உங்கள் முன் காட்சியளிக்கும்.

அதாவது அதனை நாங்ளகள் IMEI என்று அழைப்போம் (International Mobile Equipment Identity) உங்களுடைய கையடக்க தொலைபேசியையின் வெற்றி இருக்கும் இடத்தில் நீங்கள் பார்த்தல் அது தெரியும்


                                  Phone serial no. x x x x x x ? ? z z z z z z z
                     (XXXXXX - Approval code,ZZZZZZZ - Serial number)

ஏழாவது மற்றும் எட்டாவது இலக்கம்
0     2  அல்லது  2    0 - என்றால் அந்த போன் தயாரான நாடு  EMIRATES  ,தரம் : மோசம்
0    8  அல்லது   8    0 - என்றால் அந்த போன் தயாரான நாடு   GERMANY , தரம் : சுமார்
0    1  அல்லது  1   0  என்றால் அந்த போன் தயாரான நாடு  FINLAND  ,தரம் : நல்ல தரம்
0    4    என்றால் அந்த போன் தயாரான நாடு  CHINA . தரம் : நல்ல தரம்
( சீனா என்றதும் பயப்பட வேண்டாம்.அதனுடைய சாப்ட்வேர் வேறு நாட்டில் தாயரிக்கபட்டது.)

0     3    என்றால் அந்த போன் தயாரான நாடு  KOREA . தரம் : நல்ல தரம்
0     5    என்றால் அந்த போன் தயாரான நாடு  BRAZIL . தரம் :  சுமார்
0     0   என்றால் அந்த போன் ஒரிஜினல் நோக்கியா தொழிற்சாலையில் தயாரானது.  தரம் : மிக மிக நல்ல தரம், மற்றும் உடலுக்கு எந்த தீங்கும் இழைக்காதது.
 
1      3      என்றால் அந்த போன் தயாரான நாடு  AZERBAIJAN  ,தரம் : மிக மோசமான தரம்.எளிதில் பழுதடையும் . மேலும் உங்கள் உடலுக்கு தீங்கானது.

இது தவிர வேறு எண்கள் இருந்தால் இங்கு சென்று   IMEI NUMBER CHECK   சரி பார்த்து கொள்ளுங்கள்.


 மேலே சொன்னது போல் உங்களுடைய மொபைல் போனையும பரிசோதித்துப்பாருங்கள்
       நீங்கள்   *#06# டயல் செய்தவுடன்  வரும்   எண்கள்தான்  Battery ளையும்  இருக்கிறதா  என்று சரி பார்த்துகொள்ளுங்கள். இனிமேல்  NOKIA MOBILE  வாங்க சென்றால் இந்த எண்களை மறக்காமல் எழுதிக்கொண்டு போங்க. பதிவு பயனுள்ளதாக இருந்துருக்கும் என நம்புகிறேன்.


READ MORE - தரமான Nokia Brand என எவ்வாறு பரிசோதிப்பது ?

சிக்குன் குன்னியா நோய்க்கு தடுப்பூசி கண்டுபிடிப்பு

Thursday, August 18, 2011

நுளம்புகள் மூலம் பரவக்கூடியதும் அது காய்ச்சாலாக இருந்தாலும் கை, கால்கள் இயக்கத்தை முடக்கக்கூடிய ஒரு காய்ச்சலாக இது காணப்படுகின்றது. இது இலங்கையில் பல தடவை பரவி மக்களை பீதிக்குள்ளாக்கி உள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த காய்ச்சாலில் நானும் ஒரு முறை பாதித்துள்ளேன். கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் இந்தச் சம்பவம் நடைபெற்றது. அதே போல் இந்தியாவையும் இது தாக்கியது. 

நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சினைக்கு இப்போது தீர்வு காணப்பட்டுள்ளது. அமெரிக்க விஞ்ஞானிகள் இதற்கான தடுப்பூசி கண்டுபிடித்துள்ளார்கள்.

இந்த மருந்தினை அமெரிக்காவின் டெக்ஸாஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகளால் தான் இதற்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  அதாவது மரபணு மாற்றம் செய்யப்பட்ட சிக்குன் குன்னியா வைரசைக் கொண்டு இந்த மருந்து தயாரிக்கப்பட்டுள்ளது. இதனை எலிக்குப் பயன்படுத்தி பரிசோதிக்கப்பட்டுள்ளது, அது வெற்றி கண்டுள்ளது. ஆனால். அதற்கான மருத்துவ அங்கீகாரம் வழங்கப்படவில்லை.

எனவே, எலிக்கான பரீசோதனை மாத்திரமே நடைபெற்றுள்ளது அதனை மனிதனுக்கு செலுத்தி இந்த பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என இந்த விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இதற்கான தயாரிப்புச் செலவும் குறைவு என டெக்ஸாஸ் பல்கலைக்கழ விஞ்ஞானி ஸ்கேட் வீவர் தெரிவித்துள்ளார்.





READ MORE - சிக்குன் குன்னியா நோய்க்கு தடுப்பூசி கண்டுபிடிப்பு

கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை 1 1/2 மாதத்தில் அறியும் கருவி

Saturday, August 13, 2011

தினம், தினம் கண்டுபிடிப்பு என ஆய்வாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளும் ஏதாவது ஒன்றை கண்டுபிடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவை எல்லாம் இந்த மருத்துவ உலகத்திற்கும இந்த மனிதனுக்கும் பயன்படததானே செய்கிறது. 

இது போன்று ஒரு புதிய கருவியின் கண்டுபிடிப்பு தொடர்பாக உங்களுக்கு நான் எத்தி வைக்கப் போகிறேன்,

வாஷிங்டன், 
நாங்கள் தற்போது ஒரு தாயின் வயிற்றில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என கண்டுபிடிப்பதற்கு சாராசரியாக 4 1/2 மாதங்கள் காத்துக் கிடக்க வேண்டியுள்ளது.  இதனால் பல பெற்றோர்கள் சந்தோஷமு்ம் துக்கமும் அடைகின்றார்கள். 

பலருக்கு ஆண் குழந்தை வேண்டும் சிலருக்கு பெண் குழந்தை வேண்டும் வைத்தியார்கள் கூறுவார்கள் இனி ஒன்று செய்ய முடியாது அது வளர்ந்து விட்டது என.

என்ன இது! இவர் சொல்லப் போன விடயத்திற்கே வரவில்லை இந்த புதிய கண்டுபிடிப்பு தாய் கருவுற்று 1 1/2 மாதத்திலேயே அது ஆணா அல்லது பெண்ணா என கண்டு பிடிக்க முடியும் என கூறப்படுகிறது. 

இப்போ உங்களுக்கு விளங்கியிருக்கும் நான் மேலே எதைச் சொன்னது என்று, பல பெற்றோர்களின் மனநிலையை அறிந்து அவர்களுக்கு உதவக்கூடிய கருவியாக இது அமையும் என்பதில் சந்தேகமில்லை எனலாம்.

இதற்காக தாயின் இரத்த மாதிரியை எடுத்து அதில் உள்ள மரபணுவை (DNA) பரீசோதனை செய்தவுடன் ஆணா? பெண்ணா என அறிந்து கொள்ளலாம் என இந்த ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

மேலும் இவை தொடர்பாக 57 விதமான ஆய்வுகளை நடாத்தி 6500 கருவுற்ற பெண்களை ஆய்வுக்காக உட்படுத்தியுள்ளார்கள் என்பதும் இங்கு குறிப்பிட வேண்டும் அந்த ஆய்வின் பயனாக 99 சதவீதமான குழந்தைகளின் பாலினத்தை அறிந்து கொள்ள முடிந்தாகவும் அவர்கள் தெரிவி்க்கின்றர். 

மேலும், இவ்வாறான கண்டுபிடிப்பின் மூலம் முன்னர், பின்னர் ஏற்படக்கூடிய பல்வேறுபட்ட அசௌகரிங்களை களைந்து கொள்ள வாய்ப்புக்கள் ஏற்பட்டுளள்து என அந்த மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.



READ MORE - கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை 1 1/2 மாதத்தில் அறியும் கருவி

சிறுவர்களின் இதயத்துடிப்பை அறியும் கருவி கண்டுபிடிப்பு

Friday, August 12, 2011

நாம் வாழும் சூழலில் பற்பல வகையான புதிய புதிய கண்டுபிடிப்புக்கள் நாளாந்தம் வெளிவந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் அவை எல்லாமே எங்களுக்கு பயனுள்ள வகையில் இருப்பதும். எங்களுடைய வேலைகளை இலகுவாக்குவதும் போன்ற பல்வேறு சிறப்புக்களை எங்களுக்குத் தருகின்றன. 

இங்கு நாம் உங்களுக்கு கூறப்போகும் விடயமும் புதிய கண்டுபிடிப்பு தொடர்பானது. 

குறிப்பாக சிறுவர்களுக்கு நோய்கள் இலகுவாக தொற்றிக் கொள்வதும் அவர்கள் இதய நோயினால் பாதிப்படைவதும் அண்மைய ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது எனலாம். 
குழந்தைகளின் ஒட்சிசன் அளவு குறைவடையும் போது இந்த இதய நோய் ஏற்படுகின்றது. இதனை கண்டறிவதற்கான புதிய முறை தற்போது அறிமுகமாகியுள்ளது. 
 ஜப்பானின் கயோட்டோ பல்கலைக்கழக மருத்துவ குழு ஒன்று மேற்கொண்ட ஆய்வின் மூலம் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த முறையின் மூலம் ”பலஸ் ஒட்சிமேட்ரி டெஸ்ட் ” என்ற முறையின் மூலமாக இரத்தத்தின் உள்ள ஒட்சிசனின் அளவைக் கண்டுபிடிக்க முடியும் என அந்த ஆராய்ச்சிக்குழுவினர் தெரிவிக்கின்றனர். 

இதன் மூலமாக எந்த வகையான பக்கவிளையுகளும் ஏற்படாது என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன் இந்த கருவியை குழந்தைகளின் பாதம்/கை போன்ற பாகங்களில் ஒரு சிறிய சென்ஸர் கருவி பொருத்தப்பட்டு இந்த நோயைக் கண்டுபிடிக்கின்றனர். 

இதன் மூலமாக குழந்தைகயின் ஒட்சிசன் அளவை அறிந்து உரிய நேரத்தில் உரிய சிகிச்கையை அளிக்க முடியும் என அந்த ஆராய்ச்சியாளர்கள் மேலும் கருத்து தெரிவிக்கின்றார்கள்.


READ MORE - சிறுவர்களின் இதயத்துடிப்பை அறியும் கருவி கண்டுபிடிப்பு

 
 
 

Followers

Subscribe!