Google Website Translator Gadget

Showing posts with label Face book. Show all posts
Showing posts with label Face book. Show all posts

Facebook க்கின் மூலம் இலங்கையில் சைபர் க்ரைம் அதிகரிப்பு

Thursday, September 1, 2011


பிரபல சமூக தளமான பேஸ்புக் தொடர்பான பல்வேறுபட்ட செய்திகளை நாளாந்தம் உங்களுக்கு தந்த வண்ணமுள்ளேன். அத்துடன் இந்த பேஸ்புக்கினைப் பயன்படுத்தி இலங்கையில் சைபர் குற்றச் செயல்களும் நடைபெறுவதாக இங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கைத் தீவின் பல பாகங்களிலும் இன்று இணையத்தின் பயன்பாடுகள் கனிசமான முன்னேற்றம் கண்டுள்ளதால் அதனைப் பயன்படுத்தும் பயனாளிகளும் அதிகமாகவே காணப்படுவர், குறிப்பாக காதல், அரட்டை மற்றும் செய்திப்பரிமாற்றம் போன்ற நல்ல நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தினாலும் அதனை பல்வேறு தீய நோக்கங்களுக்கும் சைபர் தீவிரவாதிகள் பயன்படுத்துகிறார்கள் என அரசாங்கத்தின் சார்பில் தகவல் தர அதிகாரியான பொறியிலாளர் பள்ளயகுருகே தெரிவித்துள்ளார். அத்துடன் இதுவரை 1100 ற்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும்

இலங்கையில் தனிநபர்கள் படங்களை தவறான முறையில் பயன்படுத்தல், தனிநபர்களின் பெயர்களை குற்றச் செயல்களுக்கு பயன்படுத்துதல், பலவந்தமாக பணம் பெறுதல் தொடர்பான குற்றச் செயல்கள் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். அத்துடன் தற்போது இலங்கையில் பேசப்படும் சொல்லான கிறீஸ் மனிதனுடைய பெயரிலும் பேஸ்புக் கணக்கினை திறந்து அதன் ஊடாக பயனாளர்களை பயன்முறித்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் அது தொடர்பான கணக்குகளை உடன் நிறுத்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவத்தார். 
READ MORE - Facebook க்கின் மூலம் இலங்கையில் சைபர் க்ரைம் அதிகரிப்பு

True Story of Facebook Murder in Spain(காணொளி இணைப்பு)


இன்று இணையத்தின் வளர்ச்சி அசுர வேகத்தில் வளர்ந்து விட்டது. முன்னர் கணினியின் உதவியோடு மாத்திரம் நாங்கள் இணையத்தில் உலா வர முடியும் ஆனால் இப்போது கையடக்க தொலைபேசியில் அந்த வசதியை நாங்கள் பயன்படுத்திக் கொண்டே இருக்கிறோம். அது மாத்திரமல்லாமல் பல்வேறு சமூக தளங்களின் ஊடாக எங்களுக்கு அறிமுகமல்லாத பல நண்பர்கள், மற்றும் நண்பிகளிடம் பல்வேறுபட்ட விதமான முறையில் உறவினை வைத்திருக்கிறோம்.

அவை சாதகமான முடிவுகைளயும் தரலாம் அல்லது மிகப்பாரதுாரமான விளைவுகளையும் தாரலாம். நீங்கள்  உங்களுடைய மின்னஞ்சல், மற்றும் அலைபேசி இலக்கங்களை வழங்கும் போது அவர்கள் அதன் மூலம் அடிக்கடி தொடர்பு கொண்டு உங்கள் மனதில் ஆசைகளை வளர்த்து அது உங்களின் மரணத்திற்கு காரணமாகவும் அமையலாம்.

இவ்வாறு பிரபல சமூக தளமான பேஸ்புக்கில் இணைந்து ஒரு மாதுவின் உயிரைக் காவு கொண்ட உண்மைச் சம்பவத்தினை உங்களுக்கு தரப்போகிறேன். இதன் மூலம் உங்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கமே தவிர மற்றும்படி அதில் நீங்கள் காமத்தை கற்பனையோ எதிர்பார்க்க வேண்டும் என உங்களுக்கு முதலில் சொல்லிக் கொள்ள ஆசைப்படுகின்றேன்.

நீங்கள் யாரிடமும் இலகுவில் உங்களுடைய முழுமையான தகவல்களை வழங்க வேண்டாம் என்பதையும் மனதில் வைத்துக் கொள்ளவும்

விடயத்திற்கு வருகின்றேன்..................

இந்த சம்பவம் ஸ்பையின் நாட்டில் நடைபெற்ற உண்மைச் சம்பவம் ஒரு மாது பேஸ்புக் மூலமாக ஒரு இனைஞனிடம் தொடர்பினை மேற்கொண்டால் . மேலும் இந்த பெண் தன்னை பல்வேறு கோணங்களிலும் படமெடுத்து இந்த பேஸ்புக்கின் போட்டோ பகுதியில் போட்டிருந்தால். இதன் மூலம் இவளுக்கு பல்வேறு நாடுகளிலிருந்து எண்ணிக்கையில்லாத நண்பர், நண்பிகள் அழைப்பு கிடைத்தது. இதனால் அதிகமான நண்பர்களை இணைத்துக் கொண்டால். ஒரு ஆண்மகன் இவளை சந்திக்க விரும்புதாகவும் அத்துடன் பரஸ்பரம் (Sex) பரிமாறிக் கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டான். அதற்கு அவள் மறுத்தால், ஆனால் இவளைப்பற்றிய முழுமையாக தகவல்களை பேஸ்புக்கில் வழங்கியிருந்தால் அவையாவன விலாசம், தொலை பேசி இலக்கம் என்பனவாகும்.

மேலும் என்ன நடந்தது அவளது வீட்டுக்குச் சென்று அவளை கற்பழித்து அவளையும் படுகொலை செய்துவிட்டான் அந்த ஆண் மகன், ஆகவே நீங்களும் எச்சரிக்கையாக இருங்கள்!.......................................

இந்த காணோளியைப் பார்த்து உங்கள் உணர்வுகளை கருத்துக்களாக தெரிவியுங்கள் 




READ MORE - True Story of Facebook Murder in Spain(காணொளி இணைப்பு)

Facebook க்கின் புதிய பாதுகாப்பு அரன்கள் அறிமுகம்

Thursday, August 25, 2011

இன்றைய சமூக தளங்களில் பேஸ்புக் முதலாம் இடத்தைப்பிடித்துள்ளது. ஏனெனில் அதற்கான பயனாளர்கள் நாளுக்கு அதிகரித்த வண்ணமே உளள்னர். இதன் பயனாக அவர்கள் செயற்பாடுகளும் மாற்றமடைந்து காணப்படுகின்றது, இவ்வாறான நிலையில் பல்வேறு பாதுகாப்பு அரண்கள் அமைக்க வேண்டிய தேவை அதற்குள்ளது எனலாம்.

இதன் முதல் கட்டமாக ஒருவர் யாருடன் படங்களை பகிர்ந்து கொள்வது பற்றிய தகவல்களயும் எங்களுக்கு புரியவைக்கின்றது எனலாம். இவை தொடர்பான பல்வேறுபட்ட விடயங்களில் மாற்றங்களை செய்துளள்து. அவற்றினை இரண்டு பகுதிகளாக இடம்பெற்றுள்ளன.
ஒன்று கணக்குகளில் இரகசியப் பாதுகாப்பு மாற்றங்கள் மற்றையது, பயனாளர்கள் எவ்வாறு தமது உள்ளடக்கங்களைப் பகிர்ந்து கொள்வது தொடர்பா மாற்றங்கள்.
தற்போது இந்த profile கட்டுப்பாடுகள் பக்கத்தின் வலதுபக்கத்தில் தடித்த எழுத்துக்களில் காணப்படும்.
கடந்த காலங்களில் ஒருவர் உங்களது படங்களை அல்லது இசைகளை Privacy Settings பக்கத்தினூடாகச் சென்றே பார்க்கமுடியும்.
மேலும், தற்போது இந்தச் சரி செய்தல்கள் எல்லாம் ஒவ்வொரு பயனாளர் பக்கத்திலும் நீங்கள் உங்களது திருத்தங்களைச் செய்யும்போது வலது பக்கத்தில் தோன்றும்.
புதிதாக View Profile As எனும் அமைப்பையும் Facebook தனது பக்கத்தில் கொண்டுவரத் தீர்மானித்துள்ளது.
இதன் மூலமாக உங்கள் நண்பர் ஒருவர் உங்களது பக்கத்தைப் பார்க்கும்போது எப்படியிருக்குமோ அவ்வாறே உங்களையும் பார்க்க அது உதவுகிறது.
எவ்வாறாயினும் ஆனால், இது நீங்கள் ஒவ்வொரு தடவையும் உங்களது பக்கத்திற்குள் செல்லும்போதும் வலதுபக்க மேல் மூலையில் தோன்றும் வாய்ப்புள்ளது.
புதியவற்றில் தற்போது பயனாளர்களால் யாராவது தம்மைப் பார்க்கமுன்னரே ஏற்றுக்கொள்ளவோ மறுக்கவோ முடிகின்றது. இது படங்கள், இடங்கள் மற்றும் விளம்பரங்களையும் உள்ளடக்குகின்றது.
அதிகளவான நண்பர்களை இணைத்துக்கொள்ளுதல் அதாவது நீங்கள் ஒரு Facebook நண்பர் அல்லாமல் இருந்தாலும் கூட யாரையுமே இணைத்துக் கொள்ளலாம். இது இன்னும் பலரை இணைத்துக் கொள்ளச் வாய்ப்பளிக்கின்றது.
இதனால் ஒருவருடன் ஓர் அனுபவத்தைப் பகிர்ந்துகொள்வதானது அவர் Facebook  நண்பராகத்தான் இருக்கவேண்டும் என்பதில்லை என்பதை Facebook தெரிவிக்கின்றது.
ஆகவே, IOS மற்றும் Android பிரயோகங்களிற்கான ஐகொன்கள் இங்கு அவசியமில்லாமல் போவதால் இவை அப்புறப்படுத்தப்படுகின்றது.
அதற்கு பதிலாக புதிதாக Nearby எனும் ஐகொன் காணப்படுகின்றது. அத்துடன் பயனாளர்களால் பட அல்பங்களிற்கு அல்லது தனிநபர் படங்களுக்கு அல்லது வீடியோக்களுக்கும் இடங்களைக் சுட்டிக்காட்ட முடியும்.

மேலும், Publisher சட்டத்தில் இடங்களையும் நேரடியாக இணைக்கலாம். உலாவியிலிருந்து அல்லது கைத்தொலைபேசி மென்பொருட்களிலிருந்து நீங்கள் ஓர் இடத்தைக் சுட்டிக்காட்டலாம்.
இதன் பயனாக மேலும், இத்துடன் GPS இல் குறிக்கமுடியாத குறுகிய தூரங்களிலுள்ள இடங்களின் அமைவிடத்தினையும் தெரியப்படுத்தலாம்.
Public, Public என வித்தியாசங்காண்பதற்காக மாற்றப்பட்டுள்ளது.
இறுதியான மாற்றமாக ஒருவர் தன்னை Facebook உள்ளடக்கத்திலிருந்து அகற்ற முயலும்போதும் அதிக தெரிவுகளை வழங்குகின்றது. இதில் 3 தெரிவுகள் காணப்படுகின்றன.
ஒன்று, உங்களது படத்தினை அகற்றலாம், இரண்டு படத்தை ஏற்றியவரை அப்படத்தை அகற்றுமாறு வேண்டலாம், மூன்று அந்நபரை Facebook  இலிருந்து தடுக்கலாம்.
இந்த மாற்றத்திற்கு வரவேற்புகளும், எதிர்ப்புக்களும் காணப்படுகின்றன என்பதை நான் சுட்டிக்காட்டுதல் பொருத்தம்.








READ MORE - Facebook க்கின் புதிய பாதுகாப்பு அரன்கள் அறிமுகம்

Facebook லும் மின்னஞ்சல் பயன்படுத்தலாம்

Tuesday, November 16, 2010

நிறுவனங்கள் வளர்ச்சியடையும் போது அவர்களுக்குள் போட்டிகள் வளர்வது இயல்புதான் அண்மைக்காலமாக கூக்குள் நிறுவனத்திற்கும் பேஸ்புக் நிறுவனத்திற்கும் இடையும் போட்டிகள்  வளர்ந்து கொண்டு சென்று அது சற்று உச்சத்தை அடைந்துள்ளன. இதனால் அந்த நிறுவனமும் இலவசமாக மின்னஞ்சல் வசதியை வழங்குவதற்கு தயாரிகியுள்ளது என்பது எமக்கு இனிப்பான செய்தியாகும். ”ஊர் இரண்டானால் கூத்தாடிக்கி கொண்டாட்டமாம்” இவர்கள் என்ன தான் சண்டை பிடித்தாலும் ”கீரைக்கடைக்கு எதிர் கடை இருந்தால் எங்களுக்கு  சிறந்த சேவையைப் பெற்றுக் கொள்ள முடியும்” என்பதில் ஐயமில்லை.
அவர்கள் இலவசமாக மின்னஞ்சல் வசதியை வழங்குவது தொடர்பான அறித்தலை நிறுவர் மார்க் ஸூக்கர்பெர்க தெரிவித்தார். சான் பிரான்சிஸ்கோவில் மூன்று தினங்கள் நடைபெறும் இணையதள மாநாட்டில் கூகுள் சிஇஓ எரிக் ஷ்மிட்டும், பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸுக்கர்பெர்க்கும் பங்கேற்று புதிய வசதிகளை அறிமுகப்படுத்த உள்ளனர்.  

ஏற்கெனவே இணையதளப் பயன்பாட்டில் கூகுளை பின்னுக்குத் தள்ளி வளர்ந்து நிற்கிறது பேஸ்புக். இதன் காரணமாக பேஸ்புக் பயனாளர்களுக்கு இன்னும் சில மாதங்களுக்குள் மெயில் சர்வீஸ், எஸ்.எம்.எஸ், சாட் உள்ளிட்ட வசதிகளை வழங்க உள்ளது. இதற்கிடையே பேஸ்புக்கை விட சகல வசதிகளும் கொண்ட புதிய சமூகத் தளத்தை அறிமுகப்படுத்த கூகுள் முயன்றுவருகிறது.

எங்களுக்கு என்ன சிறந்த சேவை எங்களுக்கு கிடைத்தால் பேஸ்புக் நிறுவனம் என்ன கூக்குள் நிறுவனம் என்ன எல்லாம் ஒன்று தான்


READ MORE - Facebook லும் மின்னஞ்சல் பயன்படுத்தலாம்

 
 
 

Followers

Subscribe!