Google Website Translator Gadget

Showing posts with label Srilanka. Show all posts
Showing posts with label Srilanka. Show all posts

Universal Child Day - 2011

Friday, September 30, 2011


உலக சிறுவர் தினமானது ஐக்கிய நாடுகள் அமைப்பினால் ஒவ்வொரு வருடத்தின் நவம்பர் – 20 ல் நினைவுபடுத்தப்பட வேண்டும் என்று கூறினாலும், இலங்கையில் அது ஓக்டோபர் – 01ம்திகதி நினைவுபடுத்தப்படுவது விசேட அம்சமாகும்.
ஒவ்வொரு நாடுகளும் இந்த தினத்தை தங்களுக்கு பொருத்தமான தினங்களில் கொண்டாடுகின்றது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது எனலாம்.


மேலும் ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனிவா பிரகரனத்தின் பிரகாரம் இது அமுல்படுத்தப்படுகின்றது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.

உலகில் லட்சக்கணக்கான சிறுவர்களும் முதியவர்களும்  வறுமையினாலும் வன்முறைகளாலும் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். இவர்கள் சுதந்திரமாகவும் வாழ்வை இயல்பாகவே அனுபவிக்க வேண்டியவர்களாகவும் அனைத்து வசதி வாய்ப்புகளையும் பெற உரிமை உள்ளவர்களாக இருந்தும் அவை அனைத்தும் மறுக்கப்பட்டு அல்லது இல்லாது ஒழிக்கப்பட்டு வாழ்வின் வசந்தங்களைத் தொலைத்தவர்களாக அகதி முகாம்களிலும் வீதிகளிலும் அiனாதைகளாக அல்லது ஆதரவற்றவர்களாக பிச்சைப் பாத்திரங்களுடன் அல்லலுறும் துன்பியலைக் காணக் கூடியதாக இருக்கின்றது. அத்துடன் உலகளாவிய ரீதியில் இலட்சக்கணக்கான சிறுவர்கள் ஆயுத கலாச்சாரத்தில் மூழ்கடிக்கப்பட்டு புத்தகம் தூக்கும் கைகளில் துப்பாக்கிகளுடன் சிறுவர் படைகளாக மாற்றப்பட்டுள்ளது நோக்கத்தக்கது.

அந்த வகையில்தான் இலங்கையில் கடந்த 3 தசாப்த காலமாக தொடருகின்ற அகோர யத்தத்தின் சுவாலையில் லட்சக்கணக்கான சிறுவர்கள் தமது வாழ்வின் வசந்தங்களைத் தொலைத்தவர்களாக அபத்த வாழ்வில் சிக்குண்டு  இருக்கின்றார்கள். ஆயிரக் கணக்கான சிறுவர்கள் யுத்தத்தின் கோரத்தில் கொல்லப்பட்டிருக்கின்றார்கள்.  சொந்த நாட்டுப் படைகளின் விமானக் குண்டு வீச்சுக்களாலும் எறிகணை வீச்சுக்களாலும் உயிரிழந்த, தமது அவயவங்களை இழந்த குழந்தைகள் ஏராளம். தவிரவும் யுத்தத்தினால் தாய் தந்தை உறவினர்கள் சுற்றத்தார் என்போரை இழந்து சிறுவர் காப்பகங்களின் பாராமரிப்பில் உள்ள சிறுவர்கள் ஏராளம். இயற்கையின் சீற்றத்தால் ஏற்பட்ட சுனாமியின் கொடூரமும் ஆயிரக்கணக்கான குழந்தைகளின் இறப்புக்கும் அநாதரவானமைக்கும் காரணமாகியிருக்கின்றன.

வடக்கில் குறிப்பாக வன்னியில் தற்போது தொடர்கின்ற யுத்தத்தால் 40,000 சிறார்கள் இடம்யெர்ந்து இருப்பதாக புள்ளிவிபரத் தகவல்கள தெரிவிக்கின்றன. 35,000 க்கும் மேற்பட்ட சிறார்களின் பாடசாலைக் கல்வி முற்று முழுதாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இது போன்றே கிழக்கிலும் கடந்த இரண்டு வருடங்களாக அகதி வாழ்க்கை வாழ்கின்ற அல்லது மீள் குடியமர்த்தப்படாத 5500 க்கும் மேற்பட்ட குடும்பங்களில் உள்ளடங்கும் சிறார்கள் பல்வேறு சமூக கலாசார பாதிப்புகளுக்கு உள்ளாகியிருப்பதாக அறிக்கைகள் கூறுகின்றன.
இதேவேளை யாழ்ப்பாணக் குடாநாட்டைச் சேர்ந்த சிறுவர் சிறுமியர் உள ரீதியான பாதிப்புக்களுக்கு உள்ளாகக்கூடிய அபாயம் நிலவுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். தொடர்ச்சியான யுத்தம், இடம்பெயர்வு போன்ற காரணிகளினால் சிறுவர்கள் பாரியளவில் மன உளைச்சலுக்கு உட்படக் கூடும் எனவும் அவர்கள் கூறியுள்ளார்கள். நல்லூரில் அண்மையில் நடைபெற்ற ஓவிய மற்றும் கைப்பணிக் கண்காட்சியொன்றின் படைப்புக்கள் மூலம் அந்த சிறுவர்களது பாதிக்கப்பட்ட மனோ நிலை வெளிப்படடதாக பார்வையிட்டவர்கள் தெரிவித்திருந்தனர். நல்லூரைச் சேர்ந்த அரச சார்பற்ற தொண்டு நிறுவனமொன்று குறித்த கண்காட்சியை ஒழுங்கு செய்திருந்தது. அரசாங்கப்படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான யுத்தத்தின் அதிர்வு பாலர் மனதில் ஆழமான அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளாக மருத்துவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
READ MORE - Universal Child Day - 2011

Facebook க்கின் மூலம் இலங்கையில் சைபர் க்ரைம் அதிகரிப்பு

Thursday, September 1, 2011


பிரபல சமூக தளமான பேஸ்புக் தொடர்பான பல்வேறுபட்ட செய்திகளை நாளாந்தம் உங்களுக்கு தந்த வண்ணமுள்ளேன். அத்துடன் இந்த பேஸ்புக்கினைப் பயன்படுத்தி இலங்கையில் சைபர் குற்றச் செயல்களும் நடைபெறுவதாக இங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கைத் தீவின் பல பாகங்களிலும் இன்று இணையத்தின் பயன்பாடுகள் கனிசமான முன்னேற்றம் கண்டுள்ளதால் அதனைப் பயன்படுத்தும் பயனாளிகளும் அதிகமாகவே காணப்படுவர், குறிப்பாக காதல், அரட்டை மற்றும் செய்திப்பரிமாற்றம் போன்ற நல்ல நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தினாலும் அதனை பல்வேறு தீய நோக்கங்களுக்கும் சைபர் தீவிரவாதிகள் பயன்படுத்துகிறார்கள் என அரசாங்கத்தின் சார்பில் தகவல் தர அதிகாரியான பொறியிலாளர் பள்ளயகுருகே தெரிவித்துள்ளார். அத்துடன் இதுவரை 1100 ற்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும்

இலங்கையில் தனிநபர்கள் படங்களை தவறான முறையில் பயன்படுத்தல், தனிநபர்களின் பெயர்களை குற்றச் செயல்களுக்கு பயன்படுத்துதல், பலவந்தமாக பணம் பெறுதல் தொடர்பான குற்றச் செயல்கள் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். அத்துடன் தற்போது இலங்கையில் பேசப்படும் சொல்லான கிறீஸ் மனிதனுடைய பெயரிலும் பேஸ்புக் கணக்கினை திறந்து அதன் ஊடாக பயனாளர்களை பயன்முறித்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் அது தொடர்பான கணக்குகளை உடன் நிறுத்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவத்தார். 
READ MORE - Facebook க்கின் மூலம் இலங்கையில் சைபர் க்ரைம் அதிகரிப்பு

மர்ம மனிதன் பொதுமக்களால் மடக்கி பிடிக்கப்பட்டான் (பட இணைப்பு)

Wednesday, August 31, 2011


கிட்டத்தட்ட ஒரு மாதங்களாகியும் இந்த மர்ம மனிதனின் தொல்லை அடங்கிப் போகவில்லை, இன்னும் தொடரவே செய்கின்றன. இலங்கை அரசாங்கம் ஏதோ கூறினாலும் தற்போது இலங்கையின் வடக்கு மாகாணத்தில் அவர்களின் நடமாட்டம் அதிகமாகக் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது எனலாம்.




வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணத்தில் கோண்டாவில் வடக்கு தில்லையம்பதி கோவில் பகுதியில் உள்ள வீடடொன்றில் இன்று 31.08.2011 பிற்பகல் 4.30 மணியளவில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய இரு மர்மனிதர்களை வீட்டிலிருந்தவர்கள் கண்டதைத் தொடர்ந்து தப்பி ஓடிய நிலையில், அவர்களின் ஒருவரை அந்தப் பகுதி இளைஞர்களின் சாதுார்யத்தினால்  மடக்கிப் பிடிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றவர் தப்பியோடிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

இதனைக் கேள்விப்பட்டவுடன் மர்ம மனிதனைக் கொண்டு செல்ல வந்த இராணுவத்தினருக்கும் பொதுமக்களும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தை அடுத்து பொது மக்களினால் அவை தடுக்கப்பட்டன. இதனால் அங்கு பதட்ட நிலை காணப்பட்டது எனலாம். இவை எல்லாம் பிற்பகல் 4.30 மணியளவில் நடைபெற்றது.




கோண்டாவிலில் பகல் வேளை மாட்டிக் கொண்ட மர்ம மனிதன்!!

கோண்டாவிலில் பகல் வேளை மாட்டிக் கொண்ட மர்ம மனிதன்!!

கோண்டாவிலில் பகல் வேளை மாட்டிக் கொண்ட மர்ம மனிதன்!!

மேலும், பிடிபட்ட அந்த மர்ம மனிதனை அறையோன்றினுள் பூட்டி விட்டனர். அதனைப் பார்வையிட பொதுமக்களும் இராணுவத்தினரும் முண்யடித்துக் கொண்டிருந்தனர். அப்போது பொதுமக்களுக்கும் இராணுவத்தினக்கும் முறுகல் நிலை வலுப்பெற்றது. இருந்தும் இராணுவ உயர் அதிகாரியின் தலையீட்டினால் சுக நிலைக்கு வந்தது.

பிடிபட்ட மர்ம மனிதனை பொது மக்கள் பலமுறையில் தாக்கியதுடன் அந்த மர்ம மனிதனிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு அவனால் பதிலளிக்க முடிவில்லை, ஆனால், இராணுவம், பொலிசார் கேட்கும் கேள்விகளுக்கு மத்திரமே அவனால் பதிலளிக்க முடிந்தது. காரணம் அவனுக்கு தமிழ் தெரியாமல் இருக்கலாம், இராணுவத்தினர் சிங்களத்தில் கேட்டிருக்கலாம்.

மேலும், அவன் தன்னுடைய முகத்தினை படமெடுக்க முடியாதவாறு மறைத்துக கொள்ளும் பாணியில் நடந்து கொண்டான்.

அதன் பிற்பாடு அவனை பொலிசாரிடம் பொதுமக்கள் அவனை ஒப்படைத்தனர்,

 எத்தனை நாளுக்கு உண்மையை மறைக்க முடியும் என்றோ ஒரு நாள் நிச்சயம் வெளியே வரும்



குறித்த இளைஞன் காலில் செருப்பும், சேட், ஜீன்ஸ் என்பன அணிந்திருந்தான்.

இந்தப் பகுதியில் அடிக்கடி மர்ம மனிதனின் பீதி இருந்து வந்தாக தெரிவிக்கப்படுகின்றது.

அததுடன் பிடிபட்ட அந்த நபர் சிங்கள இளைஞர் என்பது தெரியவந்துள்ளது.

 

 

READ MORE - மர்ம மனிதன் பொதுமக்களால் மடக்கி பிடிக்கப்பட்டான் (பட இணைப்பு)

அலியை பெண்ணாக மாற்றும் சத்திரசிகிச்சை இலங்கையில்

Wednesday, August 24, 2011



விஞ்ஞானத்துறையின் முன்னேற்றங்கள் மேலோங்கிச் செல்லும் போது அவை சார்ந்த துறைகளும் விரிவடைந்து செல்வது இயல்புதான். இன்று உலகில் ஆணா, பெண்ணாக்குறான், பெண்ணை ஆணாக்கும் இவ்வாறு பல்வேறுபட்ட விடயங்கள் நாளாந்தம் நடந்த வண்ணம் உள்ளன. இந்த வகையில் எனது நாடான இலங்கையிலும் இவ்வாறான முயற்சியில் வைத்தியர்கள் இறங்கியுள்ளார்கள்.

அதாவது ஆண்களுக்குரிய ஹோமோன்களை பெண்களுக்கு செலுத்தி அதன் ஊடாக ஒரு ஆணை உருவாக்குவது போன்ற முயற்சியாகும். மேலும் விரிவாகச் சொல்லப் போனால் ஆண்களுக்குரிய ஹோமோங்களுடன் பெண்ணாய்ப் பிறந்த எட்டு வயதுச் சிறுமியை பெண்களுக்குரிய ஹோமோன்கள் உள்ளவராக மாற்றும் முயற்சியாகும். இந்த சத்திரசிகிச்சை தற்போது லேடி ரிட்ஸ்வே வைத்தியசாலையில் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக அந்த வைத்தியசாலை வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நடவடிக்கையினை நெறிப்படுத்திக் கொண்டியிருக்கிறார் இலங்கையைச் சேர்ந்த வைத்தியர்களும் இவர்களுடன் இணைந்து வெளிநாட்டு வைத்தியர்களுமாகும்.

இந்த சத்திர சிகிச்சை வெற்றியளித்தால் மேலும் பல சிகிச்சைகளை இலங்கையில் மேற்கொள்ள முடிவதுடன் இவ்வாறான மேலும் இதனை மேற்கொள்ள 8 மணித்தியாலங்கள் எடுக்கக்கூடுமென வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன் அக்குறைபாடுகளுடன் வருடாந்தம் 500 மேற்பட்ட குழந்தைகள் பிறப்பதாக அறிக்கைகள் குறிப்பிடுவதாகவும் அந்த வைத்தியசாலையின் பணிப்பாளர் ரத்ணசிறி ஹேவக்கே தெரிவித்தார். 

READ MORE - அலியை பெண்ணாக மாற்றும் சத்திரசிகிச்சை இலங்கையில்

 
 
 

Followers

Subscribe!