கடந்த பல வாரங்களாக நாடுபுராகவும் இந்த கிறீஸ் பேய்களின் அச்சம் மக்கள் மத்தியில் அதிகமாகவே காணப்படுகின்றன. குறிப்பாக சொல்லப் போனால் அதிகமாக தமிழ் முஸ்லிம் மக்கள் வாழும் பகுதிகளில் இவர்களின் நடமாட்டம் அதிகமாகக் காணப்பட்தை நாங்கள் அங்கு நடந்த சம்பங்களை ஆதாராமாக வைத்து அறிந்து கொள்ளமுடியும்.
பதுளையில் உள்ள தமிழ் மக்கள் செறிந்து வாழும் பகுதிகள் பலவற்றில் இந்த கிறீஸ் மனிதனின் அட்டகாசம் அரங்கேறியது. அதில் அவர்களுடைய ஆத்திரத்தில் இரு இளைஞர்கள் அடித்து கொலை செய்யப்பட்டதும் உங்களுக்குத் தெரியும் அடுத்த அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்கள் அதிகமாக வாழும், பகுதிகளாக இறக்காமம், பொத்துவில், சம்மாந்துறை, கல்முனை, சாய்ந்தமருது, கின்னியா, கல்முனைக்குடி, மஜித்துபுரம், வளாத்தாப்பிட்டி, காரைதீவு மற்றும் கண்டி மாவட்டங்களில் உள்ள அக்குரணை, மகியாவை, கம்பளை, கெலிஓயா போன்ற முஸ்லிம்கள் அதிகமாக வாழும் கிராமங்களில் இந்த கிறீஸ் மனிதனின் அட்டகாசம் அடிக்கடி அரங்கேறியது.
இதற்கு பின்ணனியில் உள்ளவர்கள் யாரென்று இது வரைக்கும் புதிராகத்தான் இருந்தது. அதற்கு உரியவர்களை நீங்கள் இலகுவாக அடையாளம் கண்டு கொள்ள சில ஆதாரங்கள்,
கிண்ணியாவில் நடைபெற்ற சம்பவத்தில் சம்பந்தப்பட்ட இந்த கிறீஸ் மனிதன் கடற்படை முகாமிற்கு தப்பிச் சென்றான். கல்முனையில் பொது மக்களால் பிடிக்கப்பட்ட நபர் கடற்படை வீரராகும். மேலும், கெலியோவில் இராணுவ வாகனத்தில் வந்த அந்த நபர்களின் வாகனங்களை பொது மக்கள் எரித்த்தார்கள், பொத்துவிலில் இராணுவத்தினரின் அட்டகாசம் காரணமாக ஒரு இளைஞன் அநீநியாயமான முறையில் கொலை செய்யப்பட்டான் இதற்கு யார் காரணம்? என கௌரவ அமைச்சர் பௌசி அவர்கள் விசாரானை நடாத்திய போது யார் இந்த நபரின் கொலைக்குக் காரணம் என்று கேட்ட போது அங்கு பொறுப்காக இருந்த இராணுவ அதிகாரியின் பதிலாக இருந்தது. ” அவர் கல்லடிபட்டதன் காரணமாக இறந்தாக அந்த இராணுவ உயர் அதிகாரி தெரிவித்தார்” இந்த விடயத்தை கௌரவ அமைச்சர பௌசு அவர்கள் பொத்துவிலில் பொது மக்களுடன் கலந்துகொண்ட நிகழ்வில் தெரிவித்தார்.
மக்களளைப் பீதிப்படுத்திக் கொண்டிருக்கும் இந்த கிறீஸ் மனிதனுக்கு பின்னணியில் இலங்கை இராணுவ புலனாயவுத்துறையினநேர இருப்பதாகும் இதற்கு பாதுகாப்புச் செயலாளர் கோத்தப்பாய ராஜபக்சவின உத்தரவுக்கமையவே இந்த பீதியை கிளப்பி விட்டிருப்பதாகவும் தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக பாராளுமன் உறுப்பினர் மங்கள சமரவீர (UNP) குறிப்பிட்டுள்ளார் என்பதை நான் இங்கு சுட்டிக்காட்டுல் பொருத்தம்.
முன்னதாக ‘வெள்ளை வான்‘ களை கொண்டு பீதியூட்டி வந்த சிறிலங்கா படைப் புலனாய்வாளர்கள் இப்போது கிறீஸ்பேய்களைக் கொண்டு மக்களை அச்சுறுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களால் கிறீஸ் பேய்கள் என்று பிடிக்கப்பட்டவர்கள் அனைவருமே இராணுவப் புலனாய்வாளர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர் கூறியுள்ளார்.
பொதுமக்களால் சிறிலங்கா காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட இவர்களில் பலரும் தம்மை சிறிலங்கா படையினர் என்று அடையாளம் காட்டியதும் விடுவிக்கப்பட்டு விட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை முழுவது படைமுகாம்களை நிறுவுதற்க்குரிய பிரயத்தனம் எனவும் அதற்காக 5000 படை வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் இராணுவ முகாம் நிறுவுதலாகும்.
இங்கு கீழே பொலநறுவையில் உள்ள சிகிரியாவில் பெண்களின் உள்ளாடைகளுடன் கைதான மர்மமனிதன்!

0 comments:
Post a Comment