Google Website Translator Gadget

சுயமாக ஓடும் கார் கண்டுபிடிப்பு

Wednesday, October 13, 2010

சாரதியில்லாமல் சுயமாக ஓடக்கூடிய காரினை அமெரிக்காவின் கலிபோனியா மாணிலத்தில் கூக்குள் நிறுவனத்தின் சொப்வெயார் பொறியிலாளரான செமஸ்டின் கண்டுபிடித்துள்ளனர் அத்துடன் அதனை ஓடவைத்தும் பரீசோதனை செய்தும் பார்த்துள்ளனர் என்பது இங்கு குறிப்பிட வேண்டும்.
காரின் மேல்பரப்பில் பொருத்தப்பட்டுள்ள வீடியோக்கமரா, ராடர் கருவி, சுற்றவரச் செல்லுகின்ற வாகனங்களின் துாரத்தினை அளவிடக்கூடிய லேசர் கருவிகள் என்பன இவற்றில் பொருத்தப்பட்டிருந்தன. இருந்தும் இது ஒரு பரிசார்த்த நடவடிக்கையாக இருந்தாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

இதனை பலவகையான போக்குவரத்து நெரிசலிலும் (அமெரிக்காவின் சன்பரான்ஸின்) ஓடக்கூடிய வகையில் இந்த கார் பரிட்சித்துப் பார்க்கப்பட்டுள்ளது. 

இந்தச் சோதனையின் போது எந்தவிதமான விபத்துக்களும் இல்லாமேலே ஓடியிருக்கின்றன. ஆனால் ஓரு தடவை மாத்திரமே இந்தக் காருக்குப்பின்னால் வந்த கார் இதனுடன் மோதியிருக்கிறது. 

இத்திட்டத்தின் பிரதான நோக்கம் போக்குவரத்து பாதுகாப்பு முக்கியமே தவிரே வேறு எந்த நோக்கமும் எங்களிடமில்லை என இந்த பொறியிலாளர் தெரிவித்துள்ளார்.  இந்த கார் ஓடுவதற்கான போக்குவரத்தி வரைபடங்கள் முன்னர் உருவாக்கப்பட்டன, மற்றும் இந்த சோதனை ஓட்டம் தொடர்பாக பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. 

உலக சுகாதார நிறுவனத்தின் கணக்குப்படி ஒரு வருடத்தில் 12லட்சம் பேர் வாகன விபத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இது வெற்றியடைந்தால் இந்த விபத்தின் அளவு குறைவடையும் எனவும் ஆர்வீடம் கூறுகின்றனர்.

மேலும் இது வெற்றியளித்தால் பல வகையான நன்மைகளை நாங்களும் பெற்றுக்கொள்ள முடியும். 

நன்றி BBC



0 comments:

Post a Comment

 
 
 

Followers

Subscribe!