Google Website Translator Gadget

Facebook லும் மின்னஞ்சல் பயன்படுத்தலாம்

Tuesday, November 16, 2010

நிறுவனங்கள் வளர்ச்சியடையும் போது அவர்களுக்குள் போட்டிகள் வளர்வது இயல்புதான் அண்மைக்காலமாக கூக்குள் நிறுவனத்திற்கும் பேஸ்புக் நிறுவனத்திற்கும் இடையும் போட்டிகள்  வளர்ந்து கொண்டு சென்று அது சற்று உச்சத்தை அடைந்துள்ளன. இதனால் அந்த நிறுவனமும் இலவசமாக மின்னஞ்சல் வசதியை வழங்குவதற்கு தயாரிகியுள்ளது என்பது எமக்கு இனிப்பான செய்தியாகும். ”ஊர் இரண்டானால் கூத்தாடிக்கி கொண்டாட்டமாம்” இவர்கள் என்ன தான் சண்டை பிடித்தாலும் ”கீரைக்கடைக்கு எதிர் கடை இருந்தால் எங்களுக்கு  சிறந்த சேவையைப் பெற்றுக் கொள்ள முடியும்” என்பதில் ஐயமில்லை.
அவர்கள் இலவசமாக மின்னஞ்சல் வசதியை வழங்குவது தொடர்பான அறித்தலை நிறுவர் மார்க் ஸூக்கர்பெர்க தெரிவித்தார். சான் பிரான்சிஸ்கோவில் மூன்று தினங்கள் நடைபெறும் இணையதள மாநாட்டில் கூகுள் சிஇஓ எரிக் ஷ்மிட்டும், பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸுக்கர்பெர்க்கும் பங்கேற்று புதிய வசதிகளை அறிமுகப்படுத்த உள்ளனர்.  

ஏற்கெனவே இணையதளப் பயன்பாட்டில் கூகுளை பின்னுக்குத் தள்ளி வளர்ந்து நிற்கிறது பேஸ்புக். இதன் காரணமாக பேஸ்புக் பயனாளர்களுக்கு இன்னும் சில மாதங்களுக்குள் மெயில் சர்வீஸ், எஸ்.எம்.எஸ், சாட் உள்ளிட்ட வசதிகளை வழங்க உள்ளது. இதற்கிடையே பேஸ்புக்கை விட சகல வசதிகளும் கொண்ட புதிய சமூகத் தளத்தை அறிமுகப்படுத்த கூகுள் முயன்றுவருகிறது.

எங்களுக்கு என்ன சிறந்த சேவை எங்களுக்கு கிடைத்தால் பேஸ்புக் நிறுவனம் என்ன கூக்குள் நிறுவனம் என்ன எல்லாம் ஒன்று தான்


1 comments:

மிகவும் பயனுள்ள தகவலை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி நண்பரே!

Post a Comment

 
 
 

Followers

Subscribe!