42 வருடம் சர்வதிகார ஆட்சி நடாத்திய கேணல் கடாப்பியின் சாம்ராஜ்யம் இன்றுடன் வீழ்ச்சியடைந்துள்ளது, அதாவது அவரது கோட்டையை புரட்சிப் போராளிகள் கைப்பற்றியுள்ளனர். இன்று காலை நடைபெற்ற பலத்த சண்டையின் பின்னர் இந்த சம்பவம் நடந்துள்ளது. அவர் தந்திரோபாயமான முறையில் பின்வாங்கியுள்ளார் என அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
புரட்சிப் போராளிகள் கடந்த 6 மாத கால சண்டையில் ஈடுபட்டனர் அதன் பின்னர் மும்மார் கடாபி கோடடையை சம்பவம் நிகழ்ந்துள்ளது. அத்துடன் கடாபியின் பாப் – அல் அஸிஸியாவின் வளாகத்தை தங்கள் கட்டுப்பாட்டுககு கொண்டுவந்தனர் என பிபிசி தெரிவித்தது.
புரட்சியாளர்கள் நோட்டோப்படைகளின் உதவியுடன் இதனைக் கைப்ப்றறியுள்ளன. அததுடன் அவர்களது விமானங்கள் மேலே சுற்றிக் கொண்டிருந்தன. மேலும் சுவரக்ளை உடைத்துக் கொண்டு அவர்கள் உள்ளே நுழைந்தனர் .அததுடன் அந்த சந்தர்ப்பத்தில் கடாபியோ அல்லது அவரது உறவினரோ அங்கு இருந்தார்களா என்பது தெரியவில்லை இந்த வளாகம் வீழ்ச்சிடைந்ததைத் தொடர்ந்து அவர் ஒரு ஓடியோ சாதனம் மூலம் தான் வாபஸ் வாங்குவதாக அறிவித்தார்.
புரட்சியாளர்கள் அங்கு சென்றதும் கடாபியின் படைகள் அங்கிருந்து வெளியேறிற்றி விடுவதையும் அவதாககிக்கூடியதாக இருந்தாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது ஆட்சியை பிரதிபலிக்கும் சின்னங்கள் மற்றும் அடையாளங்களை அழித்து விடுவதில் புரட்சியாளரகள் ஈடுபட்டுள்ளனர்.
உலகில் எவ்வாறான ஆட்சியாளர்களும் எப்போ ஒரு நாள் அழிந்து தான் ஆக வேண்டும் என்பது உலக நீதி அதற்கு இதுவும் ஒரு உதாரணம்.
0 comments:
Post a Comment