Google Website Translator Gadget

ஒரினச் சேர்க்கையாளர்கள் 80 சோடிகள் தாய்வானில் திருமணம்

Tuesday, August 23, 2011

இறைவன் படைப்பில் பல உண்டு அதில் ஆணும், பெண்ணும் இன்னும் ஒன்று உண்டு என என்னுடைய பதிப்பில் குறிப்பிட்டுயிருந்தேன். அதாவது அரவாணிகளுக்கான அழகிப் போட்டி-2011 என்ற கட்டுரை தொடர்பாக என்னுடைய கட்டுரையை பார்க்கவும்.

அது அவ்வாறு இருக்கட்டும் நாங்கள் விசயத்திற்கு வருவோம்.. நாகரீக முதிர்ச்சியில் மனிதன் தன்னிலை மறந்து விடுகின்றான். அதாவது ஆண், பெண் திருமணம் செய்வது தான் நியதி இன்று இந்த நிலை சில நாடுகளில் வித்தியாசமாக நடைபெற்று வருகின்றது. அமெரிக்கா, நேபாளம், ரஷிய போன்ற தாய்வான் போன்ற நாடுகள்.

இவ்வாறு அதிகால சமூதாயம் ஒன்று ஓரிணச் செய்க்கையில் ஈடுபட்டதால் அந்த சமூகம் இறைவனால் அழிக்கப்பட்டதாக நான் எனது சமயப்பாடத்தில் கற்றுயுள்ளேன்.

இன்று தாய்வானில் ஒரே இனத்தைச் சேர்ந்த  80 பெண் சோடிகள் ஒரே நேரத்தில் திருமணம் செய்துள்ளார்கள். இதனை பல சமயங்கள் மதகுருமார்கள் வண்மையாகக் கண்டித்துள்ளது.

இவர்களது திருமணத்தில் கிட்டத்தட்ட 1000 பேர் பங்குபற்றினர் இதில் திருமணம் செய்து கொண்ட மணமகள்கள் ஒருத்தியான 32 வயதுடைய செலின் சென் என்பவள் தங்களுடைய தேனிலவை அமெரிக்காவில் உள்ள நியோக்கில் வைத்துக் கொள்வதாக தெரிவித்தார்.

ஓரிணச் சேர்க்கை திருமணங்களை எமது அண்மையில் உள்ள நாடான நேபாளமும் ஏற்றுக் கொண்டுள்ளது.

இவற்றிக்கெல்லாம் காரணம் என்ன இவர்களுடைய சமயத்தில் அவர்களுக்கு போதுமான நம்பிக்கை இல்லை என்பதுதான் தாய்வான் ஒரு பௌத்த நாடும் என்பதும் குறிப்பிடத்தக்கது

முக்கிய குறிப்பினை சொல்ல வேண்டும் இலங்கையில் உள்ள ஓரினச் சேர்க்கையாளர்கள் இலங்கையில் ஒரே இனத்திருமனத்தை சட்டரீதியாக்குமாறு அவர்களிடமிருந்து கோரிக்கை வந்துள்ளதாக ஒரு செய்தி என் காதிலும் பட்டது அதனை உங்களுக்கு எத்திவைக்கிறேன்.

0 comments:

Post a Comment

 
 
 

Followers

Subscribe!