Google Website Translator Gadget

மட்டக்களப்பில் கிறிஸ் மனிதனின் அட்டகாசம்

Wednesday, August 17, 2011


2011.08.17 இன்று புதன் கிழமை கிழக்கு மாகாணத்தில் உள்ள மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஊறணியில் வீதியில் சென்று கொண்டிருந்து திருமதி எஸ். சியாமான என்னும் பெண்ணை மர்மம் மனிதன் தாக்கி பாரிய காயங்களை ஏற்படுத்தியதால் அந்த பெண்மணி மட்டக்களப்பு வைத்தியசாலையில் தற்போது சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கிறார். 


இதனால் ஆத்திரமடைந்த 11000 மேற்பட்ட பொதுமக்கள் வீதிகளில் இறங்கி தமது எதிர்ப்பினை தெரிவிக்குமுகமாக வீதிகளில் டயர் போட்டு எரித்து  போக்குவரத்தினையும் தடை செய்தனர் . இதனைத் தொடர்ந்து அந்த இடத்திற்கு இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டதுடன் வீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களையும் தாக்கினர் இதன் காரணமாக மக்கள் பல்வேறு பட்ட அசௌகரியங்களை எதிர்நோக்கினர்.

இந்த செய்தியை கேள்விப்பட்டது அந்தப் பகுதி பாராளுமன்ற உறுப்பினர்கள்,  மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் விரைந்தனர் அவர்கள் பொலிசாரின் கண்ணிர்ப்புகைக்கு தாக்கப்பட்டனர். 


இப்போதும் அங்கு நிலமைகள் சீரடைவில்லை என்பதையும் இங்கு குறிப்பிடல் வேண்டும்.


கிறீஸ் மனிதனின் தாக்குதலுக்கு உள்ளான மாதுவை பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களும் பார்வையிட்டு செல்வதையும் நீங்கள் படத்தில் காணலாம்.












இப்போது இந்த பிரதேசத்தில் உள்ள இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர் என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும். 


0 comments:

Post a Comment

 
 
 

Followers

Subscribe!