இன்றைய மனிதன் நாளுக்கு நாள் வித்தியாசமாக கற்பனை பண்ணுவதும் கனவு காண்பதும் இயல்பான ஒன்றுதான் அதனை செய்து முடிப்பவர்கள் ஒரு சிலர் மட்டுமே. பல முயற்சிகள் மேறகொண்டு அவைகள் தோல்வியில் முடிவடையதும் ஒரு சிலருக்கு அவை வெற்றியளிப்பதுமானது தான் இந்த உலகம்.

இவ்வாறு விண்வெளிக்குச் சென்றால் அங்கு தங்க இடம் வேண்டுமல்லவா அதற்காக ரஷ்யாவைச் சேர்ந்த பிரபலமான கம்பனி ஒன்று அங்கு விடுதி ஒன்றை அல்லது ஹோட்டல் ஒன்றை கட்ட முடிவு செய்தாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதில் 4 கேபின் கொண்ட 7 தங்கக்கூடியதாகவும் இருக்கும் என்று அது தெரிவிக்கின்றது.
பூமியின் சுற்றுவட்டப்பாதையின் 217 மைல் தொலைவில் வான்வெளிப் பாதையில் அமைக்கப்பட்டு பார்வையாளரின் வசதிக்காக பாரிய ஜன்னல்கள் வைக்கப்பட்டு பூமியின் காட்சிகளை கண்கூடாக கண்டு கழிக்க முடியும் அத்துடன் இந்த ஹோட்டல் 2016ம் ஆண்டளவில் பூரணப்படுத்தப்படுமென தெரிவிக்கப்படுகின்றது. இந்த சாகச சுற்றுலாவுக்கு சோயுஸ் ராக்கெட் மூலம் இரண்டு நாட்கள் பயணிக்க வேண்டி இருக்கும்.
இந்த விண்வெளி ஹொட்டல் பயணம் பட்ஜெட் சுற்றுலாவாக இருக்காது. 5 நாள் பயணத்திற்கு தங்கும் செலவு
மட்டும் ஒரு லட்சம் பவுண்ட் ஆகும். பயண கட்டணம் 5 லட்சம் பவுண்ட் வரை ஆகும்.
அங்கு உடலின் எடை கவனத்தி்ல் கொள்ளப்படாததன் காரமாக சமதளப்படுக்கைக்குப் பதிலாக நேராக நிற்கும் படுக்கை முறையை தெரிவு செய்யலாம் அத்துடன் இவர்களை கூட்டிச் செல்வதற்கு அனுபவம் வாய்ந்த குழுவினரும் அங்கு வாருவார்கள்.
எமது பூமியில் தயாரிக்கப்பட்ட உணவு ராக்கெட் மூலம் அனுப்பப்படும். அங்கு மைக்ரோஓவனில் சுடவைத்து சாப்பிடலாம். ஐஸ், டீ, மினரல் வாட்டர், தண்ணீர் பழரசம் ஆகியவையும் கிடைக்கும். மது குடிக்க தடை உள்ளது. கழிவு நீர் மறுசுழற்சி செய்து பயன்படுத்தப்படுவதுடன் இன்னும் பல வசதிகள் அளிக்கப்படுமென தெரிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment