Google Website Translator Gadget

மர்ம மனிதன் பொதுமக்களால் மடக்கி பிடிக்கப்பட்டான் (பட இணைப்பு)

Wednesday, August 31, 2011


கிட்டத்தட்ட ஒரு மாதங்களாகியும் இந்த மர்ம மனிதனின் தொல்லை அடங்கிப் போகவில்லை, இன்னும் தொடரவே செய்கின்றன. இலங்கை அரசாங்கம் ஏதோ கூறினாலும் தற்போது இலங்கையின் வடக்கு மாகாணத்தில் அவர்களின் நடமாட்டம் அதிகமாகக் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது எனலாம்.




வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணத்தில் கோண்டாவில் வடக்கு தில்லையம்பதி கோவில் பகுதியில் உள்ள வீடடொன்றில் இன்று 31.08.2011 பிற்பகல் 4.30 மணியளவில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய இரு மர்மனிதர்களை வீட்டிலிருந்தவர்கள் கண்டதைத் தொடர்ந்து தப்பி ஓடிய நிலையில், அவர்களின் ஒருவரை அந்தப் பகுதி இளைஞர்களின் சாதுார்யத்தினால்  மடக்கிப் பிடிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றவர் தப்பியோடிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

இதனைக் கேள்விப்பட்டவுடன் மர்ம மனிதனைக் கொண்டு செல்ல வந்த இராணுவத்தினருக்கும் பொதுமக்களும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தை அடுத்து பொது மக்களினால் அவை தடுக்கப்பட்டன. இதனால் அங்கு பதட்ட நிலை காணப்பட்டது எனலாம். இவை எல்லாம் பிற்பகல் 4.30 மணியளவில் நடைபெற்றது.




கோண்டாவிலில் பகல் வேளை மாட்டிக் கொண்ட மர்ம மனிதன்!!

கோண்டாவிலில் பகல் வேளை மாட்டிக் கொண்ட மர்ம மனிதன்!!

கோண்டாவிலில் பகல் வேளை மாட்டிக் கொண்ட மர்ம மனிதன்!!

மேலும், பிடிபட்ட அந்த மர்ம மனிதனை அறையோன்றினுள் பூட்டி விட்டனர். அதனைப் பார்வையிட பொதுமக்களும் இராணுவத்தினரும் முண்யடித்துக் கொண்டிருந்தனர். அப்போது பொதுமக்களுக்கும் இராணுவத்தினக்கும் முறுகல் நிலை வலுப்பெற்றது. இருந்தும் இராணுவ உயர் அதிகாரியின் தலையீட்டினால் சுக நிலைக்கு வந்தது.

பிடிபட்ட மர்ம மனிதனை பொது மக்கள் பலமுறையில் தாக்கியதுடன் அந்த மர்ம மனிதனிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு அவனால் பதிலளிக்க முடிவில்லை, ஆனால், இராணுவம், பொலிசார் கேட்கும் கேள்விகளுக்கு மத்திரமே அவனால் பதிலளிக்க முடிந்தது. காரணம் அவனுக்கு தமிழ் தெரியாமல் இருக்கலாம், இராணுவத்தினர் சிங்களத்தில் கேட்டிருக்கலாம்.

மேலும், அவன் தன்னுடைய முகத்தினை படமெடுக்க முடியாதவாறு மறைத்துக கொள்ளும் பாணியில் நடந்து கொண்டான்.

அதன் பிற்பாடு அவனை பொலிசாரிடம் பொதுமக்கள் அவனை ஒப்படைத்தனர்,

 எத்தனை நாளுக்கு உண்மையை மறைக்க முடியும் என்றோ ஒரு நாள் நிச்சயம் வெளியே வரும்



குறித்த இளைஞன் காலில் செருப்பும், சேட், ஜீன்ஸ் என்பன அணிந்திருந்தான்.

இந்தப் பகுதியில் அடிக்கடி மர்ம மனிதனின் பீதி இருந்து வந்தாக தெரிவிக்கப்படுகின்றது.

அததுடன் பிடிபட்ட அந்த நபர் சிங்கள இளைஞர் என்பது தெரியவந்துள்ளது.

 

 

0 comments:

Post a Comment

 
 
 

Followers

Subscribe!