Google Website Translator Gadget

பிரபு தேவா, நயன்தாராவின் திருமணம் மும்பையில் நடைபெற்றதா?

Wednesday, August 31, 2011


சினிமா உலகில் திருமணங்கள் மற்றும் மறுமணங்கள் எல்லாம் சகமான விடயம், தொட்டதை தொடுவதும், பட்டதை கழட்டி விடுவதும் அவர்கள் மரபு அந்த துறையின் புனித் தன்மையும் அவ்வாறு தான்.

நீண்ட நாட்களாக காதலர்களா சுற்றித் திரிந்த சோடிகள் மும்பையில் திருமணம் செய்தாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன. அத்துடன் இந்த இரு நடிகர்களும் தமிழில் கொடி கட்டிப்பறந்தவர்கள், நடிகை நயன்தாரா பிரபு தேவாவை திருமணம் செய்வதற்காக வேண்டிய கிறிஸ்தவ மதத்திலிருந்து இந்து மதத்திற்கு மாறியுள்ளார்.

இதன் அடிப்படையில் இருவருக்கும் திருமணம் நடந்திருக்கலாம் என கூறப்படுகின்றது அதாவது இந்த திருமணத்திற்கு பல முக்கிய புள்ளிகள் அழைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்க்காத விடயமாக இருவரும் இரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இவர்கள் இருவரினதும் பெற்றோரகள் மாத்திரம் கலந்து கொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.  இந்து முறைப்படி புரோகிதர்கள் வைத்து வேள்வி வளர்த்து இந்த திருமணம் நடந்தது என்கின்றனர்.

அத்துடன் முதல் மனைவிக்கு  பிறந்த மகன்கள் மீது பிரபுதேவா இன்னும் பிரியமுடன் இருக்கிறார். அடிக்கடி அவர்களுடன் போனில் பேசுகிறார். விவாகரத்தான போது மகன்களுக்கு பல லட்சம் மதிப்புள்ள சொத்து மற்றும் வீடுகளை எழுதி கொடுத்துள்ளார்.
திருமணத்திற்கான அழைப்பிதழ் அச்சிட்டு ஆடம்பரமாக நடாத்தினால் அவரது முன் திருமணத்தி்ல் உள்ள குழந்தைகளின் மனம் பாதிக்கப்படும் என்ற நோக்கில் இதனை மிகவும் எளிமையான முறையில் நடாத்தியதாக தெரிவிக்கப்படுகி்ன்றது. இருந்தும் சக நடிகை, நடிகர்களை அழைத்து ஹோட்டல் ஒன்றில் விருந்தொன்று ஏற்பாடு செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
இது இவ்வாறிக்க........ இந்த திருமணத்தை உறுதி செய்யமுடியவில்லை பிரபுதேவாவுக்கு நெருக்கமானவர்களிடம் கேட்டால் அது வதந்தியென தெரிவிக்கப்படுகிறது. இருந்தும் அடுத்த மாதமளவில் அவர்களது திருமணம் நடக்கும் என்கிறார்கள் அவர்கள்........

ஏதோ இருவருக்கும் எப்போதாவது திருமணம் நடக்கும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம். 

0 comments:

Post a Comment

 
 
 

Followers

Subscribe!