மேற்கூறிய கோலத்தில் பள்ளிவாசலுக்கு நுழைந்து பெண்கள் தொழுது கொண்டிருக்கும் போது தாக்க முயற்சித்த மர்ம மனிதன் தப்பியோடி சம்பவம் ஒன்று கடந்த புதன் கிழமை இரவு நாரமல்லபெந்தெனிகொட கிராமத்தில் உள்ள ஜூம்ஆ பளள்வாசல் ஒன்றில் நடைபெற்றுள்ளது.
மேலும் சம்பவம் தொடர்பாக தெரிவிக்கப்படுவதாது
அங்கு தராவிஹ் தொழுகை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது சுமார் 100 பேர் அளவில் பெண்களும் ஆண்களும் வெவ்வேறாக தொழுவது வழக்கம் அன்றை தினம் பெண் ஒருவரை கிறிஸ் மனிதர் தாக்க முற்பட்ட போது அந்தப் பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு தொழுது கொண்டிருந்த ஆண்கள் தங்களுடைய தொழுகையை விட்டு விட்டு ஓடிவ்ந்த போது அந்த சந்தர்பபத்தில் கிறீஸ் மனிதன் கழிவறை சுவரின் மீது ஏறி தப்பிச் சென்றுள்ளான்.
ஹபாய் அணிந்த புதியவர் இருவர் வந்தாகவும் அத்துடன் அவர்களை நாங்கள் புதியவர்கள் யாரும் தொழுவதற்கு வந்துள்ளதாக எண்ணியதாகவும் அந்த சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக பள்ளிவாசல் நிர்வாகம் உடனடியாக தங்களுடைய நிர்வாகத்தினரை கூட்டி உரிய பாதுகாப்பு நடவடிக்கைளை மேற்கொள்ளுமாறு பொலிசாரிடமும் விழிப்புக்குழுவிடமும் கோரிக்கை விடுத்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கிறது.
0 comments:
Post a Comment