Labels
- Blogger Tips (2)
- Cinema (1)
- Education (1)
- Face book (4)
- Funny (41)
- Google (3)
- Google Adsense (1)
- News (37)
- Science (1)
- Software (8)
- Sports (2)
- Srilanka (4)
- Tamil News (34)
- te (1)
- Wallpaper (36)
- Windows (1)
- World (7)
- தொழில்நுட்பம் (9)
- பொது (11)
- விநோதம் (56)
Popular Post
Google Website Translator Gadget
அவுஸ்ரேலியாவில் முஸ்லிம்கள் பர்தா அணிவது தடையா?
Tuesday, August 30, 2011இன்று உலகில் பற்பல நாடுகளில் வித்தியாசமான சட்டங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமுள்ளதை நாங்கள் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. அதாவது ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் அண்மைக்காலமாக முஸ்லிம் தங்களை முகத்தை மறைக்கும் பார்தாவை போடக் கூடாது என சட்டங்களை கொண்டுவந்த அதனை அமுல்படுத்திய வண்ணம் உள்ளன.
முதலாவதாக பிரான்ஸ், அடுத்து இத்தாலியும் அதனை அமுல் படுத்துகின்றன. இவ்வாறான விடயங்களில் உலகில் மதரீதியான ஜனநாயத்திற்கு ஏற்படுகின்ற அச்சுறுத்தல் என்றுதான் சொல்ல வேண்டும். அதாவது மேற்சொன்ன நாடுகளில் இவ்வாறான பெண்களை ஏனைய பெண்கள் அவதானிக்கும் போது அவர்களுக்குள் இருக்கும் மனசாட்சி இஸ்லாம் மதத்தின் மீது கூடுதலான ஈர்ப்பினை ஏற்படுத்துவதாகவும் அதன் வாயிலாக அந்த நாடுகளில் எதிர்காலத்தில் முஸ்லிம்களின் செல்வாக்கு அதிகரிக்கக் கூடும் என்ற அச்சத்தில் தான் அவ்வாறு செய்யப்பட்டு வருவதாக அங்கு செய்யப்பட்ட ஆய்வுகளிலிருந்து தெரியவருவதாக பிரபல பத்திரிகைகள் கருத்து வெளியிட்டுள்ளன. ” நெருப்பில்லாமல் புகையுமா”
இந்த வரிசையில் ஒரு கண்டத்தில் உள்ள ஒரே ஒரு நாடான அவுஸ்திரேலியா இவ்வாறான சட்டத்தை கொண்டுவந்துள்ளது. இருந்தும் அது சற்று வித்தியாசமான சடட்மாகும்.
அங்குள்ள பொலிசார் கேட்டுக் கொண்டால் விலக்கி காட்ட வேண்டும் என்ற உத்தரவாகும். இல்லாவிடில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள்.
அண்மையில் அந்த நாட்டில் உள்ள நியு சவுத் வேல்ஸ் மாகாணத்தில் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்களைக் கண்டறிய முஸ்லிம் பெண்கள் தங்களுடைய முகத்திரையை விலக்கி பொலிசாரிடம் காட்ட வேண்டும் என சட்டமியற்றப்பட்டுள்ளது.
அந்த சட்டத்தை வி்க்டோரியா மாகாணம் பின்பற்றத் தொடங்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இவ்வாறான சட்டங்கள் பல்வகைப்பட்ட நாடுகளில் உள்ள மதம் சார்ந்த மக்களின் மனங்களில் தேவையில்லாத பீதிகையும், குரோதத்தையும் வளர்க்க வாய்ப்புகள் அதிகம் என்பது என்னுடைய கருத்து.
இந்த ஆக்கம் எந்த ஒரு தரப்பினரையும் தாக்கும் நோக்குடன் எழுதப்படவில்லை என்பதையும் இதனை வாசிக்கும் வாசகர்கள் உணர்ந்து கொள்ளவும்.
Posted by Techno & Funny at 9:41 PM
Labels: News, Tamil News, பொது
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
சுட்டிகளை சொடுக்கி படித்து சிந்திப்போமா?
1.>>> இஸ்லாமிய ஆடை ஹிஜாபுக்குப் (புர்கா) பின் கண்ட வாழ்க்கை! - சகுந்தலா நரசிம்ஹன் <<<
2. >>> ஹிஜாப் ‘பர்தா’ 'அபாயா' தரும் சுதந்திரம்!-ஜெஸிலா <<<<
3. >>> இஸ்லாத்தில் பெண்களை ஹிஜாப் (பர்தா - புர்கா, -துப்பட்டி)அணிய கட்டாயப்படுத்துவது ஏன்? <<<
4. >>>
25. "நச்"பெண்களுக்கு பர்தா 20ம் நூற்றாண்டில் பொருந்தி வருமா? <<<
5.>>>
24. "நச்"முஸ்லிம் பெண்களுக்கு பர்தா புர்கா ஹிஜாபு தேவையா? <<<
6. >>>
பர்தா, பெண்ணுரிமை & பொதுக்கழிப்பிடம் <<<
Post a Comment