Google Website Translator Gadget

லிபியா ஜனாதிபதியின் அந்தரங்க லீலைகள் அம்பலம்

Wednesday, August 31, 2011


லிபியாவைப் பற்றி பல்வேறு தகவல்கள் உங்களுக்காக நான் அடிக்கடி எழுதியுள்ளேன். அது போன்று இன்று ஒரு வித்தியாசமான தகவல்களோடு உங்களைச் சந்திக்கின்றேன். தனது 20 வயதில் இராணுவ புரட்சியின் மூலம் ஒரு நாட்டின் தலைவராக வருவது என்பது அவ்வளவு இலகுபட்ட காரியமல்ல, அது மட்டுமல்லாமல் தொடர்ந்து 40 வருடங்கள் ஆட்சி புரிவதென்பதும் இலகுபட்ட காரியமல்ல  என்பதையும் நீங்கள் நினைவி்ல் வைத்துக் கொள்ளவும்.

விடயத்திற்கு முந்துகிறேன்..........

கேனல் கடாபி தனது பாதுகாப்பிற்காக பெண்கள் படையணி ஒன்றினை 1970 ஆம் ஆண்டு தொடக்கம் வைத்திருந்து வந்தார். இவர்கள் விசேட பயிற்சி பெற்றவர்கள் அதற்காக அந்த அரசாங்கம் இவர்களை வற்புறுத்தி படையணிக்குச் சேர்த்துக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  மேலும், இந்த பயிற்சியினை முடித்த பின்னர் அவர்கள் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுவர் அவ்வாறு அதில் அவர்கள் சித்தி பெற்றால் மாத்திரம் இந்த அணியில் சேர்க்கப்படுவார்கள். இவர்கள் 'அமெசொனியன் கார்ட்ஸ்' என அழைக்கப்படுகின்றனர்.

மேலும், இந்தப் படையினில் உள்ள இளம் பெண்களை பாலியலுக்குப் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுக்ககள் எழுந்துள்ளன.  அதாவது இந்த படையணியில் உள்ள பெண்களை அவர் பதம் பார்த்த பி்ன்னர் அவருடைய மகன் பதம் பார்த்தாகவும், அடுத்த நிலையில் உள்ளவர்கள் இவ்வாறு செய்ததாகும் செய்திகள் வெளியாகியுள்ளன. இது தொடர்பான ஆதாரங்கள் தற்போது திரட்டப்பட்டுக் கொண்டிருப்பதாகவும் இதனை சர்வதேச நீதிமன்றில் அவருக்காக குற்றச்சாட்டுக்களுடன் இதனையும் முன்வைப்பதாகவும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.


1 comments:

உங்களோட popular post கொஞ்சம் சிறியதாக்கி வைங்கோ ஒன்றையும் வாசிக்க முடியவில்லை மறைக்கிறது.

thanks.

Post a Comment

 
 
 

Followers

Subscribe!