திருமனம் முடித்தவுடன் அடுத்து தம்பதிகள் தங்களுக்கு பிடித்த ஏதாவது ஒரு பகுதிக்குச் சென்று சந்தோஷமாக இருக்க வேண்டும் நோக்கத்திற்காக இந்த தேன்னிலவு சம்பிராயத்தை புதுமனத்தம்பதிகள் கொண்டாடுகின்றனர். திருமணம் முடித்ததும் வாழ வேண்டும் என்ற கனவில் இந்த உலகத்தையை அதாவது மரணம் என்ற எண்ணத்தை மறந்து வாழும் ஒரு நிலை அந்த தேனிலவின் போது நடைபெற்ற கோரச் சம்பவம் உங்களுக்காக இங்கே........... தங்களுடைய தேனிலவைக்கழிப்பதற்கு சிசெல்ஸ் தீவுக்குச் சென்ற பிரித்தானியாவைச் சேர்ந்த நபரை சுறா மீன் தாக்கப்பட்டு உயிரிழந்த பரிதாபம். கெமா ஹவுட்டன் (27) இயன் ரெட்மண்ட் (30) திருமணப்பந்தத்தில் இம்மாதம் (06.08.2011) ஆந்திகதியன்று இணைந்தனர். இவர்கள் காதலர்களாக பல வருங்கள் காதலித்தவர்கள் இவர்களுடைய ஆசை தங்களுடைய தேனிலைவை இந்த தீவில் கழிக்க வேண்டும் என்று அதற்காக அங்கு சென்றுள்ளனர். 2011.08.17ஆம் திகதி மதியம் இயன் ரெட்மண்ட என்பவர் கடலில் நீராடும் வேளை அங்கு வந்த பாரிய சுறா மீன் ஒன்று அவரைத் தாக்கியுள்ளது. இந்த மீன் இவரைத்தாக்கும் போது கரையில் இவருடைய மனைவி சூரிய வெளிச்ச குளியலில் ஈடுபட்டிருந்தார். அந்த கோரக்காட்சி அவருடைய கண் முன்னே அரங்கேறியது. அவளது கணவன் அலறும் சத்தம் கேட்டு அங்கு பார்த்த போது இந்த காட்சியை அவள் கண்முன்னே நடந்தது. |
அதன் பின்னர் பலரை உதவிக்கு அழைத்து அவரை கரைக்கு கொண்டுவந்து பின்னர் ஹெலிகொப்டர் மூலம் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றும் பயன் கிடைக்கவில்லை. அவருக்கு அதிகமான குருதி வெளியேறியதால் அவர் மரணத்தை தழுவிக்கொண்டார். இச் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்திருந்த நபரொருவர் தான் நபரொருவரைக் கண்டதாகவும் அவரது இடது காலில் பெரிய சதைப்பகுதியொன்றைக் காணமுடியவில்லையெனவும், அவரது தொடை எலும்பைக் கண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதே போன்று இம்மாதம் 2 ஆம் திகதி குறித்த கடற்கரைப்பகுதியில் இதேபோன்று சுறாவின் தாக்குதலுக்குள்ளாகி 36 வயதான் பிரான்ஸ் நாட்டவர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து இந்த தீவில் குளிப்பதை தடை செய்ய கோரிக்கைகள் எழுப்பப்பட்டுள்ளன. |
0 comments:
Post a Comment