கடந்த வெள்ளிக்கிழமை தாய்லாந்தின் புதிய பிரதமராகப் பியூ தாய் கட்சியைச் சேர்ந்த இங்லக் ஷினவத்ரா தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து அந்நாட்டின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையை தட்டிக்கொண்டார். அத்துடன் இவர் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் தக்ஷின் ஷினவத்ராவின் இளைய சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது. தாய்லாந்தில் கடந்த யூலை 3ம் திகதி நடந்த பொதுத் தேர்தலில் இங்லக்கின் பியூ தாய் கட்சி ஆளும் கட்சியான ஜனநாயக் கட்சியைத் தோற்கடித்தது.
இந்த நாட்டில் 2006ம் ஆண்டில் இருந்தே மறைமுக இராணுவ ஆட்சி நடந்து வந்தது. அப்போதைய ஆட்சியில் இருந்த தக்ஷின் ஷினவத்ராவைப் பதவி இறக்கிவிட்டு இராணுவம் ஆட்சியைக்கைப்பற்றியது. பின்னர் சுராயுத் சுலனான்ட் பிரதமராக நியமிக்கப்பட்டார். 2008 வரை அவர் பிரதமர் பதவியில் இருந்தார். திடீரென அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு மக்கள் சக்தி கட்சியைச் சேர்ந்த சொம்சாய் வோங்சாவத் பிரதமராக நியமிக்கப்பட்டார்.
தாய்லாந்து நாட்டில் மொத்த வாக்குவங்கியில் 3/5 வாக்கினைப் பெற்று வெற்றி பெற்றார். இந்நிலையில் அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் புதிய பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் 296 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இங்லக்குக்கு ஆதரவாகவும், 3 பேர் எதிராகவும் வாக்களித்தனர். 197 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்கெடுப்பைப் புறக்கணித்தனர். இதையடுத்து 50 சதவீதத்துக்கு மேலான வாக்குகளைப் பெற்று இங்லக் வெற்றி பெற்றதாக அவைத் தலைவர் சோம்சாக் அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து ஜனநாயக ரீதியிலான அரசைத் தேர்ந்தெடுக்க கடந்த யூலை 3ம் திகதி தேர்தல் நடத்தப்பட்டது. இத் தேர்தலில் இராணுவத்துக்கு எதிராக மக்கள் மத்தியில் இருந்த அதிருப்தி பிரதிபலித்தது. தாய்லாந்து இக்கட்டான சூழலை சந்தித்துவரும் நிலையில் இங்லக் ஷினவத்ரா பிரதமராகப் பொறுப்பேற்றுள்ளார். நாட்டில் அரசியல் ஸ்திரத்தை உருவாக்குவதுடன் ஜனநாயக அரசிடமிருந்து மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் கட்டாய நிலையில் அவர் உள்ளார்.
இனியாவது தாய்லாந்து நாட்டில் ஜனநாயகம் உயிப்பிக்கப்படுமா? அல்லது இராணுவ ஆட்சி மீண்டும் தொடருமா என மக்கள் அங்கலாய்க்கின்றனர். அந்த நாட்டு மக்கள் பல்வேறுபட்ட எதிர்பார்ப்புக்களையும் அபிவிருத்திகளையும் எதிர்பார்த்து்ள்ளார்கள் என்பதையும் தெரிவிக்க வேண்டும்.
0 comments:
Post a Comment