இலங்கையை பொருத்தமட்டில் இலங்கையர் ஒருவர் தனது கவனம் முழுவதையும் விளையாட்டில் செலுத்துவதென்றால் அது கிரிக்கெட் என்பதை யாரும் மறுத்துரைக்க முடியாது.
இந்த வகையில் T20 தொடரில் இலங்கை அணி உலக ஜாம்பவானாம் அவுஸ்ரெலியா அணியை இலங்கை மண்ணில் வீழ்த்து இந்த தொடரை 2-0 வெண்றுள்ளது என்பதை இலங்கையன் என்ற வகையில் நானும் பெருமைப்படுகின்றறேன்.
158 என்ற வெற்றி இலக்கை நோக்கி ஆடிய அவுஸ்திரேலியா ஆரம்ப தூடுப்பாட்ட வீரர்களின் சிறந்த ஆட்டத்தின் மூலம் வேகமாக ரன்களை குவித்தனர்.தனது முதல் விக்கெட்டை 71 ரன்களின் போது மெத்தியுஸின் சிறந்த களதடுப்பின் மூலம் வோனர் ஆட்டமிழந்து சென்றார்.
அதன்பின்பு வந்த பேட்ஸ்மன்கள் அஜந்த மென்டிஸின் சூழற்பந்து வீச்சுக்கு மளமளவென்று பெவிலியன் திரும்பினர்.113 க்கு 6 விக்கெட்களை இழந்து இங்கட்டான சூழ்நிலையில் அணி தலைவர் கமறூன் வைட் போரடினாலும் தங்கள் இலக்கை அவுஸ்திரேலியாவால் அடைய முடியவில்லை.
இந்த ஆட்டத்தில் சிறந்த ஆட்டநாயகனாக 16 ரன்களை மட்டும் கொடுத்து 6 விக்கெட்களை பதம்பார்த்த அஜந்த மெண்டிஸ் தெரிவானார். சர்வதேச இருபதுக்கு இருபது போட்டியில் சிறந்த பந்துவீச்சு சாதனையை அஜந்த நிலை நாட்டினார்.

இந்த வெற்றி இலங்கை அணிக்கு ஊக்கத்தை வழங்கும் என விளையாட்டு விமசகர்கள் தெரிவிக்கிறார்கள்.
0 comments:
Post a Comment