Google Website Translator Gadget

100 வயது மரதன் ஓட்ட வீரரான இந்திய தாத்தா!(பட இணைப்பு)

Tuesday, September 6, 2011


நாங்கள் சுகதேகியாக இருந்து நல்ல உடல் ஆரோக்கியத்துடனும், பலத்துடனும் 75-80 வயது வரையுமே எங்களால் இயல்பாக நடக்கவும், ஓடவும் முடியும். ஆனால் நான் இங்கு குறிப்பிடும் தாத்தாவுக்கே 100 வயது வந்தாச்சி ஆனால் அவர் இன்னும் மரதன் ஓட்ட வீரனாகத் திகழ்வது தான் ஆச்சரியமாகவுள்ளது.

இந்தியாவைச் சேர்ந்த 100 வயதான தாத்தா தான் உலகில் மிகவும் வயதான மரதன் ஓட்ட வீரராவார். அதாவது இவரின் சாதனைகளுக்கு வயது வரம்பு கிடையாது 2012 Edinburgh Race பதிவு செய்துள்ள முதல் நபரும் இவர் தான்.

1989 ஆம் ஆண்டு தொடக்கம் தனது ஓட்டத்தை ஆரம்பித்த இந்த தாத்தா இன்னும் ஓய்வெடுக்க இல்லையாம் என தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் 1911 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1ம் திகதி பிறந்த இந்த தாத்தா இந்த ஆண்டில் நுாற்றாண்டைக் கொண்டாடினார்.

இவரது உணவு என்ன தெரியுமா இஞ்சியினால் தயாரிக்கப்பட்ட உணவும், ஒரு கோப்பை தேநீரும் தான் அதனை அருந்தியவுடன் தினமும் 10 மைல் ஓடுவாராம். உங்களுக்கு முடிந்தால் 1 மைல் ஓடிப்பாருங்கள் உங்கள் உடம்பின் நிலையை நீங்களே கண்டு கொள்ளுவீர்கள். மேலும், இந்த தாத்தா அதிக மத நம்பிக்கை கொண்டவராம். அதற்காக வேண்டி அவர் சொல்லுவது எனக்கு கடவுள் வழங்கிய வரம் என அடிக்கடி நினைவுபடுத்துகிறார்.




0 comments:

Post a Comment

 
 
 

Followers

Subscribe!