பிரபல சமூக தளமான பேஸ்புக் தொடர்பான பல்வேறுபட்ட செய்திகளை நாளாந்தம் உங்களுக்கு தந்த வண்ணமுள்ளேன். அத்துடன் இந்த பேஸ்புக்கினைப் பயன்படுத்தி இலங்கையில் சைபர் குற்றச் செயல்களும் நடைபெறுவதாக இங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இலங்கைத் தீவின் பல பாகங்களிலும் இன்று இணையத்தின் பயன்பாடுகள் கனிசமான முன்னேற்றம் கண்டுள்ளதால் அதனைப் பயன்படுத்தும் பயனாளிகளும் அதிகமாகவே காணப்படுவர், குறிப்பாக காதல், அரட்டை மற்றும் செய்திப்பரிமாற்றம் போன்ற நல்ல நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தினாலும் அதனை பல்வேறு தீய நோக்கங்களுக்கும் சைபர் தீவிரவாதிகள் பயன்படுத்துகிறார்கள் என அரசாங்கத்தின் சார்பில் தகவல் தர அதிகாரியான பொறியிலாளர் பள்ளயகுருகே தெரிவித்துள்ளார். அத்துடன் இதுவரை 1100 ற்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும்
இலங்கையில் தனிநபர்கள் படங்களை தவறான முறையில் பயன்படுத்தல், தனிநபர்களின் பெயர்களை குற்றச் செயல்களுக்கு பயன்படுத்துதல், பலவந்தமாக பணம் பெறுதல் தொடர்பான குற்றச் செயல்கள் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். அத்துடன் தற்போது இலங்கையில் பேசப்படும் சொல்லான கிறீஸ் மனிதனுடைய பெயரிலும் பேஸ்புக் கணக்கினை திறந்து அதன் ஊடாக பயனாளர்களை பயன்முறித்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் அது தொடர்பான கணக்குகளை உடன் நிறுத்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவத்தார்.
0 comments:
Post a Comment