
இது போன்று ஒரு புதிய கருவியின் கண்டுபிடிப்பு தொடர்பாக உங்களுக்கு நான் எத்தி வைக்கப் போகிறேன்,
வாஷிங்டன்,
நாங்கள் தற்போது ஒரு தாயின் வயிற்றில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என கண்டுபிடிப்பதற்கு சாராசரியாக 4 1/2 மாதங்கள் காத்துக் கிடக்க வேண்டியுள்ளது. இதனால் பல பெற்றோர்கள் சந்தோஷமு்ம் துக்கமும் அடைகின்றார்கள்.
பலருக்கு ஆண் குழந்தை வேண்டும் சிலருக்கு பெண் குழந்தை வேண்டும் வைத்தியார்கள் கூறுவார்கள் இனி ஒன்று செய்ய முடியாது அது வளர்ந்து விட்டது என.
என்ன இது! இவர் சொல்லப் போன விடயத்திற்கே வரவில்லை இந்த புதிய கண்டுபிடிப்பு தாய் கருவுற்று 1 1/2 மாதத்திலேயே அது ஆணா அல்லது பெண்ணா என கண்டு பிடிக்க முடியும் என கூறப்படுகிறது.
இப்போ உங்களுக்கு விளங்கியிருக்கும் நான் மேலே எதைச் சொன்னது என்று, பல பெற்றோர்களின் மனநிலையை அறிந்து அவர்களுக்கு உதவக்கூடிய கருவியாக இது அமையும் என்பதில் சந்தேகமில்லை எனலாம்.
இதற்காக தாயின் இரத்த மாதிரியை எடுத்து அதில் உள்ள மரபணுவை (DNA) பரீசோதனை செய்தவுடன் ஆணா? பெண்ணா என அறிந்து கொள்ளலாம் என இந்த ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
மேலும் இவை தொடர்பாக 57 விதமான ஆய்வுகளை நடாத்தி 6500 கருவுற்ற பெண்களை ஆய்வுக்காக உட்படுத்தியுள்ளார்கள் என்பதும் இங்கு குறிப்பிட வேண்டும் அந்த ஆய்வின் பயனாக 99 சதவீதமான குழந்தைகளின் பாலினத்தை அறிந்து கொள்ள முடிந்தாகவும் அவர்கள் தெரிவி்க்கின்றர்.
மேலும், இவ்வாறான கண்டுபிடிப்பின் மூலம் முன்னர், பின்னர் ஏற்படக்கூடிய பல்வேறுபட்ட அசௌகரிங்களை களைந்து கொள்ள வாய்ப்புக்கள் ஏற்பட்டுளள்து என அந்த மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
0 comments:
Post a Comment