இலங்கையில் செழிப்பு மிக்க பகுதியாக கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தில் 11.08.2011 ஆந் திகதியன்று நடந்ததென்ன நான் உங்களுக்கு தருவதற்கு முனைகினறேன்.
பொத்துவில் - 06ம் வட்டாரத்தில் வசிக்கும் KPM. வீதியில் வசிக்கும் ஜூனைத்தீன் ஆசிக் (22) என்ற பெண்மனி இந்த சம்பத்தில் பாதிக்கப்பட்டு கல்முனை அஷ்ரப் வைத்தியசாலையில் தற்போது சிகிச்சை பெற்றுவருகிறார்.
இவர் கூறுகிறார் .
11.08.2011 இரவு நான் 8.30 மணியளவில் தண்ணீர் எடுப்பதற்காக நான் சென்ற போது என்னை யாரோ ஒருவர் சடுதியான முறையில் வீட்டின் மேல்பகுதியிலிருந்து துாக்கினார். நான் பயத்ததில் கத்தினேன். அங்கு பார்த்த போது உடம்பு எல்லாம் கறுப்பு நிறத்துடைய ஒருவன் என்னை பிடித்திருந்தான். நான் கத்த முனைந்த போது அவன் எனது வாய்க்குள் விரலையோட்டினான். அப்போது அந்த விரலில் ஏதோ ஒரு திரவம் தடவப்பட்டதை உணர்ந்தேன். அப்போது அவனது கையில் கூரான ஆயுதம் இருந்தது. நான் அவனிடத்திலிருந்து விடுபட கத்திய போது அதன் கத்தம் கேட்டு அயலவர்கள் வரவே, அவன் கீழே என்னை தள்ளிவிடடு ஓடிவிட்டான் என தெரிவித்தார். மேலும் குறித்த பெண்ணின் கனவர் மத்திய கிழக்கு நாடென்றில் தொழில் செய்து வருவதன் காரணமாக தனது தாய், தந்தையுடன் இந்த மாது வாழ்ந்து வருகின்றார்.
மர்ம மனிதனால் தாக்கப்பட்டு கல்முனை அஷ்ரப் வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் பெண்
இதனைக் கேள்விப்பட்ட பொதுமக்கள் இந்த இடத்திற்கு விரைந்து வந்து நிலமைகளை அறிந்து கொண்டு பின்னர் அங்குள்ள பொலிசாருக்கும், இரானுவத்திற்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலையை அடுத்து கைதி செய்யப்பட்ட 4 பேரை விடுதலை செய்யுமாறு பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினார்கள்.அந்த சந்தர்ப்பத்தில் பொது மக்கள் பொலிசார் மீது கல்வீச்சினை மேற்கொண்டார்கள். இதன் விளைவாக இரானுவம் வரவழைக்கப்பட்டதுடன் கண்ணீர்புகை குண்டு மறறும் துப்பாக்கிச் சுடும் நடாத்தப்பட்டது. மேலும், ஆர்ப்பாட்டத்தை களைப்பதற்கு மேற்கொண்ட துப்பாக்கிச்சுட்டில் 4.30 மணியளவில் இளைஞர் ஒருவர் மரணமடைந்தார் இவர் முன்னாள் பிரதேச சபை வேட்பாளராகும். மற்றும் ஒரு இளைஞன் காயமடைந்தான். மனவேதனையைத்தருகி்ன்றது.
இந்த துப்பாக்கிச் சுட்டின் போது கொள்ளப்பட்டவர் முகம்மட் மஹ்ஜூன் என்பவராகும்
இந்த சம்பவம் கிழக்கு மாகாண சபை உறுப்பினரரன மஜித் SP அவர்களின் வீட்டுக்கு முன்பாக நடந்தென்பதையும் நான் இங்கு குறிப்பிட வேண்டும்.
ஐனாதிபதியிடம் அமைச்சர் ரவுப் ஹக்கீம் தொடர்பு
இந்த விடயம் தொடர்பாக நீதியமைச்சர் றவுப் ஹக்கீம் அவர்கள் தற்போது சீனாவிற்கு சுற்றுப்பயணம் மேற்ககொண்டிருக்கும் ஜனாபதிபதி மகிந்த ராஜப்கசவிடம் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார். பொத்துவிலிலுள்ள இரானுவத்தினை உடனடியாக அகற்றுமாறு கேட்டுக்கொண்டார் என்பதையும் குறிப்பிட வேண்டும்.
மேலும், அம்பாறை மாவட்டத்தில் உள்ள திருக்கோவில் பிரதேசத்தில் ஒரு மர்மமனித பொதுமக்கள் மடக்கிப்பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்தனர். அதனைத் தொடர்ந்து மர்மமனிதனுக்கு சட்ட நடவடிக்கை எடுக்கும்படி பொது மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு பொலிசாறோடு கைகலப்பில் ஈடுபட்டனர். இதன் விளைவாக பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில் இரு இளைஞர்கள் காயமடைந்து அம்பாறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றார்கள் என்பதையும் இங்கு கோடிட்டு காட்டுகின்றேன்.
இந்த கிராமம் மேற்குறிப்பிட்ட பொத்துவில் கிராமத்திற்கு அண்மையில் உள்ள ஒரு கிராமமாகும் என்பது தெரிவிக்கின்றேன்.
09.08.2011ஆந் திகதியன்று அதே மாவட்டத்தில் உள்ள சம்மாந்துறையில் மாலை 6.30 மணியளிவில் குளித்துக் கொண்டிருந்த பெண்ணை இந்த மர்மமனிதன் தாக்கிவிட்டு தப்பித்துச் சென்றுவிட்டான் என்பதும் முக்கியமான விடயமாகும். இது மேற்கூறிய பிரதேசத்திற்கு அண்மையில் உள்ள பிரதேசமாகும்.
மேற்காட்டிய விடயங்களை அவதானிக்கும் போது தமிழ், முஸ்லிம் மக்கள் வாழும் பிரதேசங்களில் இவ்வாறான சம்பவங்கள் நிகழ்வதை அவதானிக்கக்கூடியதாகவுள்ளது எனலாம்.
இதே போல் தோட்டப்பகுதிகளில் பல மர்ம மனிதர்கள் நடமாடித்திருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் வருகின்றன. பதுளையில் உள்ள டிக்வெல்ல பெருந்தோடட்த்தில் ஒரு மர்ம மனிதன் பிடிக்கப்பட்ட பொது மக்களால் நைப்புடைக்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்படடனர். அப்போது அவர் பதுளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகினறார் .அவரின் நிலமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நபர் பொழும்பு பிலியந்தலையைச் சேர்நதவர். மேலும் பல மர்ம மனிதர்கள் பல பெண்களை சீன்டியதாக அங்குள்ள தகலவ்கள் தெரிவிக்கின்றன.
மேலும் திருகோணமலையில் உள்ள குச்சவெளிப்பகுதியில் மர்ம மனிதர்களின் நடமாட்டத்தை அவதானித்தாக அங்குள்ள பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். மேலும், அவர்களைப் பிடிப்பதற்கு பொதுமக்கள் முனைந்த போது அவரகள் தப்பியோடியதாக தெரிவிக்கப்படுகி்ன்றது.
இரக்கக்கண்டி என்னும் பகுதியில் வெள்ளை வேனில் வந்த இளைஞர்கள் சிலரை அங்குள்ள பொதுமககள் மடக்கிப்பிடிதத போது அவ்விடத்திற்கு வந்த மோட்டார் சைக்கிலிள் வந்த இளைஞர்கள் பொதுமக்களை பயமுறுத்தியதாகவும், அவர்களை விடுவிக்குமாறும் கேட்டுக்கொண்டதாக அவ் மக்கள் தெரிவித்தனர். அத்துடன் மடக்கிப்பிடிக்கப்ட்ட இளைஞர்கள் பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.
இங்குள்ள மக்கள் இதற்கு பயந்து அவர்களின் நாளாந்த நடவடிக்கையில் பலவகையான பாதிப்புக்களை ஏற்படுத்தியதோடு இது தொடர்பாக அரசாங்கம் காத்திரமான எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என்பது வேதனை தரும் விடயமாகும்.
இந்த மர்மமனிதர்களின் நடவடிக்கை தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு பொலிஸ்மா அதிபரிடம் அமைச்சர் ரவுப் ஹக்கிம் வேண்டுகோளைப் பிரப்பித்தாள்கள் என்பது இங்கு குறிப்பிட வேண்டும்.
0 comments:
Post a Comment