நாம் வாழும் சூழலில் பற்பல வகையான புதிய புதிய கண்டுபிடிப்புக்கள் நாளாந்தம் வெளிவந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் அவை எல்லாமே எங்களுக்கு பயனுள்ள வகையில் இருப்பதும். எங்களுடைய வேலைகளை இலகுவாக்குவதும் போன்ற பல்வேறு சிறப்புக்களை எங்களுக்குத் தருகின்றன.
இங்கு நாம் உங்களுக்கு கூறப்போகும் விடயமும் புதிய கண்டுபிடிப்பு தொடர்பானது.
குறிப்பாக சிறுவர்களுக்கு நோய்கள் இலகுவாக தொற்றிக் கொள்வதும் அவர்கள் இதய நோயினால் பாதிப்படைவதும் அண்மைய ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது எனலாம்.
குழந்தைகளின் ஒட்சிசன் அளவு குறைவடையும் போது இந்த இதய நோய் ஏற்படுகின்றது. இதனை கண்டறிவதற்கான புதிய முறை தற்போது அறிமுகமாகியுள்ளது.
ஜப்பானின் கயோட்டோ பல்கலைக்கழக மருத்துவ குழு ஒன்று மேற்கொண்ட ஆய்வின் மூலம் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த முறையின் மூலம் ”பலஸ் ஒட்சிமேட்ரி டெஸ்ட் ” என்ற முறையின் மூலமாக இரத்தத்தின் உள்ள ஒட்சிசனின் அளவைக் கண்டுபிடிக்க முடியும் என அந்த ஆராய்ச்சிக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.
இதன் மூலமாக எந்த வகையான பக்கவிளையுகளும் ஏற்படாது என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன் இந்த கருவியை குழந்தைகளின் பாதம்/கை போன்ற பாகங்களில் ஒரு சிறிய சென்ஸர் கருவி பொருத்தப்பட்டு இந்த நோயைக் கண்டுபிடிக்கின்றனர்.
இதன் மூலமாக குழந்தைகயின் ஒட்சிசன் அளவை அறிந்து உரிய நேரத்தில் உரிய சிகிச்கையை அளிக்க முடியும் என அந்த ஆராய்ச்சியாளர்கள் மேலும் கருத்து தெரிவிக்கின்றார்கள்.
0 comments:
Post a Comment