Google Website Translator Gadget

ஆடம்பர அரை நீர்மூழ்கி ஹோட்டல் ஒன்று கட்டாரில் ! (படங்கள் இணைப்பு)

Friday, August 19, 2011



பல்வேறுபட்ட வகையான ஹோட்டல்கள் உலகில் பல இடங்களில் காணப்படுகின்றன. அவைகள் ஒவ்வொன்றுக்கு தனிச்சிறப்புக்கள் உள்ளன. அவைகள் குகைகள், மரங்கள், சிறைகள், கடலுக்கடியில் என்பவாகும். அது போல் நான் இங்கு குறிப்பிடப் போவதும் ஒரு தனிச்சிறப்பு ஹோட்டல் தொடர்பானது.

மத்தியகிழக்கில் இன்று கட்டார் நாடும் எல்லா விடயங்களிலும் தனது சிறப்பினை நாளுக்கு நாள் காண்பித்துக் கொண்டிருக்கிறது.

பல புதுமைகள், ஆரடம்பரமான அரை நீர்மூழ்கி ஹோட்டல் ஒன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதன் பெயர் Amphibious 1000 இதனை 
இத்தாலி நாட்டின் Giancarlo Zema Design Group நிறுவனம் இப்புதுமையான ஹோட்டலை நிர்மாணிக்கின்றது. 


இதில் பின்வரும் வசதிகள் காணப்படுகின்றன, அவையாவன, படகு வீடு, படகு, அரை நீர்மூழ்கி கட்டிடங்கள், வதிவிடங்கள், அலுவலகங்கள், நவீன மரீனாக்கள் மற்றும் ஹோட்டலின் கோபுரத்தின் மத்தியில் உணவு விடுதி ஒன்று அமைந்துள்ளது. 80 அரை நீர்மூழ்கி கட்டிடங்களில் விருந்தினர் தங்க வைக்கப்படடுள்ளனர். இவ்கையான கட்டிடங்கள் ஜெலிஃபிஸ் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

அத்துடன் கடலுக்கடியில் இருந்து காட்சிகளை இரசிக்க கூடிய வகையில் அறைகள் காணப்படுகின்றன. அத்துடன் மின்சார வாகனங்ள், ஹைட்ரஜன் எஞ்சின்களுடன் இயங்கக்கூடிய சிறிய ரக அலுமினிய படகுகள் மூலமே ஹோட்டல் நுழைவாயலுக்குள் பிரவேசிக்க முடியும். இதனை நிர்மாணிப்பதற்கான செலவு எவ்வளவு தெரியும் 500 மில்லியன் அமெரிக்க டொலர் என கணக்கெடுக்கப்பட்டுள்ளது.















0 comments:

Post a Comment

 
 
 

Followers

Subscribe!