அண்வெளியில் பற்பல அதிசயங்கள் நாளாந்தம் நடந்த வண்ணம் தான் இருக்கின்றன. அவைகள் எல்லாம் மனிதனுக்கு தெரிவதில்லை. அவ்வாறு தெரிந்தாலும் அதனை அறிவிக்கவும், அறிந்து கொள்ளவும் வாய்ப்புக்கள் கிடைக்காமல் போகலாம்.
இருந்தும் ..................................
இந்த விண்வெளியில் கறுப்பு ஓட்டைகள் நட்சத்திரங்களை விழுங்கும் சந்தர்ப்பங்களும் உண்டு என தெரிவிக்கப்படுகின்றன.
இவை தொடர்பாக தற்போது தான் முதல் முறையாக தெரியப்படுத்தியுள்ளார்கள் விஞ்ஞானிகள்.
இந்த நிகழ்வானது 39லட்சம் ஒளி ஆண்டுக்கு அப்பால் நடைபெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் அதனை ஆய்வாளர்கள் நாசாவில் உள்ள நுண்ணோக்கி மூலம் படம் பிடித்துள்ளார்கள் என்றால் பாருங்கள் எவ்வளவு துாரம் மனிதனின் ஆளுமை உள்ளது என்று.
ஆச்சரியப்படக்கூடிய வகையில் அவர்கள் தீவிரமான எக்ஸ்ரே ஒளி வீச்சுகளையும் பார்த்தனர். அப்போது நட்சத்திர மண்டலத்தில் சூரியன் போன்ற மிகப் பெரிய நட்சத்திரம் பெரும் கறுப்பு ஓட்டையில் மூழ்குவதையும் அவர்கள் கண்டுபிடித்தனர்.
இந்த வகையான பெரும் கறுப்பு ஓட்டைகள் கவர்ந்து இழுக்க கூடிய ஈர்ப்பு சக்தியை அதிகம் கொண்டதாகும். அந்த கறுப்பு ஓட்டைகள் ஈர்த்த நட்சத்திரத்தை மெல்ல சாப்பிட்டு விடும் தன்மை கொண்டது ஆகும்.
இதனை அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழக பேராசியர் டேவிட் பர்ரோஸ் தலைமையிலான குழு இந்த அரிய நிகழ்வை படம்பிடித்து எங்கள் போன்றவர்கள் பார்வைக்காக தந்துள்ளார்கள் என்றால் அதனை நாங்கள் பாராட்டத்தான் வேண்டும்.
1 comments:
ithu graphics nu kuda theriya post paniruka una ena solrathu?
Post a Comment