Google Website Translator Gadget

கூக்கிள் பிளசின் விளையாட்டு விந்தை வெளியிடப்பட்டுள்ளது.

Monday, August 15, 2011



தற்போதுள்ள சமூகத்தளங்கள் தங்களை பிரபலப்படுத்துவதில் போட்டா போட்டி தங்களுடைய வெளியீடுகளை வெளியிட்ட வண்ணம் உள்ளன. என்னுடைய ஒரு கட்டுரையில் கூக்குள் பிளஸ அறிமுகம் தொடர்பாக உங்களுக்கு விளக்கம்  தந்திருந்தேன். அதே போல் இன்று அதனுடைய ஆட்டம் தொடங்கியுள்ளது. என்னவென்று தொடரை வாசியுங்கள்!

போட்டியாளர்களாக இன்று திகழும் பேஸ்புக் அதற்கு எதிர்ப்பாக கூக்குள் இரண்டு நிறுவனங்களுக்கும் தான் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கூக்குள் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை கவரும் விதமாக இந்த விளையாட்டுத் தொடரை தொடங்கியதுடன் நாளுக்கு நாள் செய்திகள் வந்தவண்ணமே உள்ளது.


உங்கள் கூக்கிள் ப்ளஸ் முகப்பு பக்கத்தின் மேலே Home, Photos, Profile, Circles என்ற Tab-ற்கு அருகே புதிதாய் ஒரு Tab இருக்கும். அது தான் Google Plus Game-ன் Tab-ஆகும். இன்னும் சரியான அமைப்புக்கு வரவில்லை அது ஒத்திகை நிலையில் காணப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது..

ஆட்டத்தின் அசத்தல்கள் (விளையாட்டுகளும் வசதிகளும்):

இணையத்தில் பிரபலமான Angry Birds Game உள்பட மேலும் சில    விளையாட்டுகள்(படத்தை பார்க்கவும்)தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் பல விளையாட்டுக்கள் வரும் எனவும் கூகுள் தெரிவித்துள்ளது.

உங்கள் Circle-ல் உள்ளவர்கள் சமீபத்தில் விளையாடிய விளையாட்டுக்கள் பற்றிய தகவல்களை பார்க்கலாம். 

ஒரே விளையாட்டில் நண்பர்களுடன் சேர்ந்து விளையாடலாம். (பேஸ்புக் விளையாட்டு போல). 

விளையாட்டில் நீங்கள் எடுத்த மதிப்பெண்களை நண்பர்களுடன் பகிரலாம்(பேஸ்புக் விளையாட்டு போல).

உங்களுக்கு விளையாட்டுகளில் ஆர்வம் இல்லை என்றால், அதனை செயல்நீக்கம் (Disable) செய்யலாம்.

இன்னும் சில வசதிகள் உள்ளன. பயன்படுத்தி பார்த்தபிறகு விரிவாக பதிவிடுகிறேன். 

இது  பற்றிய அறிவிப்பு: Games in Google+: fun that fits your schedule
கூடுதல் தகவல்கள்: 

போட்டிக்கு போட்டி:

கூகிள் ப்ளஸ்ஸின் இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே, பேஸ்புக் தளமும் விளையாட்டில் சில மாற்றங்கள் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. அது பற்றி படிக்க 
http://blog.facebook.com/blog.php?post=10150251242342131
  
நானும் ஆட்டத்துல இருக்கேன்: 

நான் என்ன சளைத்தவனா என twitter நிறுவனமும் தனது கைக்கு எட்டும் துாரத்திற்கு செல்வதற்கு தயாராகியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இந்த twitter நிறுவனமும்  புதுப்புது வசதிகளை அறிமுகப்படுத்துகிறது.

1. இதுவரை twitter தளத்தில் புகைப்படங்களை பகிர வேண்டுமானால் Twitpic என்ற தளத்தை பயன்படுத்தி வந்தோம். தற்போது நேரடியாகவே ட்விட்டர் தளத்தில் பகிரும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

2. மற்றவர்களின் twitter பக்கத்திற்கு சென்றால், அங்கு உடனடியாக அவருக்கு செய்தி அனுப்பலாம்.



ஏட்டுக் போட்டி, எமக்கு பல்வகை வசதிகள் ஹீலோவில்
இந்த நிறுவனம் twitter ளம் சொந்தமாக படங்களை பகிரும் வசதியை கொண்டு வந்ததால் செம கடுப்பில் இருக்கும் (???) twitpic தளத்தின் நிறுவனர், ஹீலோ என்ற ஒரு சமூக வலைத்தளத்தை உருவாக்கியுள்ளார். ஆனால் இத்தளத்தில் ஒரு பெரிய மாற்றம் உள்ளது. ட்விட்டர் தளத்தில் நாம் பகிர்வதற்கு பெயர், ட்வீட். ஹீலோவில் பகிர்வதற்கு பெயர் பிங்(Ping).

என்னுடைய முகவரி: http://heello.com/ (இங்கு போய் பாருங்கள்) http://googleblog.blogspot.com/2011/08/games-in-google-fun-that-fits-your.html

0 comments:

Post a Comment

 
 
 

Followers

Subscribe!