வாழ்ந்தாலும் வாழ வேண்டும் உலகில் உள்ளவர்கள் நான்கு பேராவது தன்னுடைய பெயர்களை உச்சரிக்க வேண்டும் என நான் சிறிய பருவத்தில் முதியோரின் அறிவுரைகளை படித்திருக்கிறேன். அந்த வகையில் நான் இங்கு குறிப்பிடும் மனிதரும் தன்னுடைய பெயரை நிலை நிறுத்துவதற்கு முயற்சிக்கும் வகையில் சிங்கத்துடன் தனது நாள்களை கடந்த திட்டமிட்டுள்ளார் உக்ரையினைச் சேர்நத நபர் அலெக்ஸ்ஸாண்ர் (40) அத்துடன் அவர் ஒரு மிருகக்கசாட்சி சாலையையும் நடாத்திவருகின்றார்.
இவருடைய மிருகக்காட்சி சாலையில் சாம்சன் என்ற ஆண் சிங்கம, கத்யா என்ற பெண் சிங்கம் மற்றும் கரடிகளும் பூணைகளும் காணப்படுகின்றன.
இவைகள் கொடிய விலங்குகளாக இருந்தாலும் நான் அதனை அன்போடு வளர்த்து வருகின்றேன். இந்த மாதத்தின் மத்திய பகுதியில் அது குட்டி போடும் அதற்கு நான் அன்பை செலுத்துவேன் என தெரிவித்தார். இந்த நபர் ஒரு ஓவியர் என்பதால் எப்போதும் ஓவியம் வரைந்து கொண்டிருப்பேன் என தெரிவிததார். அதுமட்டுமல்ல இந்த விலங்குகளுக்கு சிக்கிரெட், பீயர் வாசனை என்பன எரிச்சலுாட்டும் எனவே அவற்றை நான் தவி்த்து வருகின்றேன் என தெரிவித்தார்.
மேலும் அமெரிக்காவின் புளோரிடா மாணலத்தைச் சேர்ந்த ஜேம்ஸ் ஜாப்லன் என்பவர் இது போன்று சிங்கத்தோடு இரண்டு வாரங்கள் கழித்த சாதனையே இன்றைய உலக சாதனையாக இருக்கிறது எனலாம். இதனை முறியடிக்கும் நோக்கத்தோடு இவரது முயற்சி அமைந்துள்ளது என அவர் தனது கருத்தை தெரிவித்தார்.
தன்னால் நடாத்தப்படும் இந்த காட்சிசாலைக்கு நிதி திரட்டுவதற்காகவும் உலக சாதனை ஒன்றை படைக்கவேண்டும் என்ற வெறியில் பெண் சிங்கத்துடன் 35 நாட்கள் தங்க முடி செய்துள்ளதோடு 10.08.2011 அதன் குகைக்குள் சென்றுள்ளார் என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும். அத்துடன் குகையில் வெப் கமரா, டொயிலட் மற்றும் குளியறை வசதி செய்யப்பட்டுள்ளது என்பதையும் சுட்டிக்காட்டுதல் பொருத்தமாகும்.
0 comments:
Post a Comment