இந்த தளத்துக்கு வந்து என்னை ஊக்குவித்துக்கொண்டிருக்கும் வாசகர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டு விடயத்திற்கு முந்துகின்றேன்.
ஒரு மனிதனின் பல்வேறுபட்ட நோய்கள் தோன்றுகின்றன பெரும்பாலும் அநேகமான நோய்களுக்கு மருந்து கண்டுபிடித்தாலும் சில நோய்களுக்கு மாத்திரமே மருந்து கண்டுபிடிக்கவில்லை எனலாம். மேலும் இன்றைய மருத்துவ உலகத்திற்கு இலகுவான முறையில் சிகிச்கைகளை மேற்கொள்ள பல்வேறுபட்ட புதிய சாதனங்கள் வந்த வண்ணம் உள்ளன.
மனிதனில் ஏற்பட்டுள்ள நோய்களின் முக்கிய அறிகுறிகளை கண்டறிய நாங்கள் வழமையாக பரீசோதனை செய்து பார்ப்பது அவனின் இதயத்துடிப்பும், வெப்பநிலையுமாகும்.
அதே போல் இந்த கருவானது தற்காலிக பச்சைகுத்தல் போல் ஒட்டிக்கொள்ளும். இதில் தலைமுடியை விட மெல்லியதொரு சவ்சில் மின்னுணரிகளை ஆய்வாளர்கள் பதித்து இதனை சிறுவர்கள் பயன்படுத்தும் புகழ்பெற்ற பச்சையில் பயன்படுத்தப்படும் பொலியெஸ்ரை பின்பக்கத்தி் வைத்தனர்.
இதன்விளைவு, தோலுடன் ஒட்டி அதற்கேற்ப வளையக்கூடிய உணரி ஒன்று கிடைத்தது. இந்த உணரியினை நோயாளருக்கு இடைஞ்சல் இல்லாமலே வசதியாக அணிவிக்க முடியும். தற்போது இந்தப் பரீட்சார்த்த உணரி 24 மணித்தியாலம் வரையே தோலில் பதிந்திருந்தது. ஆனால் இதன் புதிய மேம்படுத்தப்பட்டு வரும் கருவியில் தோலின் வெடிப்புகள் பதிவுச்செயற்பாட்டை நிறுத்தினாலும் 24 மணித்தியாலம் வரை தோலுடன் நீடித்து நிற்கும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.
இலத்திரனியல் மற்றும் உயிரியல் திசுக்களுக்கிடையேயான வித்தியாசத்தைக் குறைப்பதே இதன் முக்கிய இலக்காகும்.
இதனை வைத்தியசாலைகளில் நோயாளிகளின் மூளை அலைகள், தசைநார் அசைவுகள், கதைப்பதற்கான குரல்நாண் துடிப்புகளை அறிவதற்கும் காயங்களின்மீது வெப்பத்தினை அனுப்பி குணமாக்குவதற்கும் செயற்கையான உறுப்புக்களின் மீது வைத்து உணர்திறனை ஏற்படுத்துவதற்கும் பயன்படுத்தலாம்.
இந்த அமைப்பானது நோயாளிகளுக்கு வசதியான நிலையையும் இலகுவான தன்மையையும் நம்பக்கூடிய பதிவுகளையும் தரலாமென விஸ்கொன்சின் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவர் குறிப்பிட்டார்.
இங்கு இதனைப் பதிப்பதுபோலவே இலகுவாகக் கழற்றவும் முடியும்.
இதனை எப்போது சந்தைக்கு வருமென்பது பற்றித் தயாரிப்பாளர்கள் கூறவில்லை. விரைவில் வருமென அவர்கள் ஊகம் தெரிவித்தார்கள்.
மேலும் பார்க்க இந்த காணோளியை பார்க்கவும்
0 comments:
Post a Comment