நாளுக்கு நாள் வீதி விபத்துக்கள் அதிகரித்த வண்ணம் காணப்படுகின்றன. இதனைத் தடுக்க அந்த நாட்டு சட்டங்களும், நிறுவனங்களும் எவ்வளது தான் போதனை செய்தாலும் அவை நடந்து கொண்டு தான் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதற்காக பல புதிய யுக்திகளை கையாண்டு இந்த மனிதனுக்கு எத்திவைக்க முடியுமா என்று தாய்லாந்து நாட்டில் போக்குவரத்து பிரிவனரால் ஒரங்குட்டான் குரங்களை இதில் இணைத்துள்ளார்கள்.
இந்த நடவடிக்கை 2011.08.12 (வெள்ளிக்கிழமை) ஆரம்பித்து வைக்கப்பட்டது, இந்த விழிப்புணர்வுப் பிரசாரத்திற்காக இவை வீதிகளில் சைக்கள்களை ஓட்டிச் சென்றன.
இந்த நிகழ்ச்சிக்கு தலைவராக உள்ள குரங்கின் பெயர் பம், வயது 08 இது வெள்ளை மஞ்சளும் கலந்த ரீசேட் அணிந்து இருந்தது. நீல நிற சைக்கிள் ஒன்றில் வீதி உலா வந்தது. இதற்கு நீல நிறம்தான் ரெம்ப பிடிக்குமாம்.
பம்முடன் கூடவே இரு குரங்குகள் இப்பிரசாரத்தில் பங்கேற்று இருந்தன. ஆனால் பம்மின் பரிவாரங்களில் ஒன்று தலைக்கவசம் அணிந்து இருக்கவில்லை.
இவ்விழிப்புணர்வுப் பிரசாரம் பொதுமக்களை குறிப்பாக குழந்தைகளை பெரிதும் ஈர்த்து உள்ளது.
எனவே இதன் மூலமாவது நாம் நல்ல படிப்பினையை கண்டு கொள்வோம்.
இது தாய்லாந்து உள்ள பிரபல மிருகக்காட்சிச்சாலையான டுசிட் க்குச் சொந்தமானது.
இது தாய்லாந்து உள்ள பிரபல மிருகக்காட்சிச்சாலையான டுசிட் க்குச் சொந்தமானது.
0 comments:
Post a Comment