இலங்கையின் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக இந்த தீவின் பொலநறுவை மாவட்டத்தின் சிகீரிய பகுதி திகழ்கின்றது. அது கிழக்கு மாகாணத்தின் மற்றும் வடமேல் மாகாணத்திற்கும் இடைப்பட்டதாகும். இந்த மாவட்டத்தில் மிக அதிகமான அடர்ந்த காடுகளும், யானைகளின் நடமாட்டங்களும் அதிகமாகும்
பல நாள் மக்களை கிறீஸ் மனிதனாக நடித்து அடிக்கடி அச்சுறுத்தி வந்த 34 வயதுடைய முகமூடியணிந்த நபர் ஒருவரை பொலிசார் சனிக்கிழமை கைது செய்தனர்.
பொலநறுவைச் சேர்ந்த இந்நபர் கடந்த மூன்று வாரங்களாக இப்பகுதியில் நடமாடியதாகவும் இரவு நேரங்களில் பெண்களை பயமுறுத்தியதாகவும் சீகிரிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வஜிர அத்தபத்து தெரிவித்தார். அத்துடன் அந்நபரை இந்த பொலிஸ் பொறுப்பதிகாரியின் தலைமையிலே கைதி செய்யப்பட்டுள்ளார்.
இந்த நபர் அடர்ந்த காட்டுப்பகுதியில் மறைந்திருந்த போது கைதிசெய்யப்பட்டார். மேலும் மக்களை அச்சமூட்டுவதற்கு இந்நபர் பெண்களின் உள்ளாடைகளை திருடும் வழக்கத்தை கொண்டிருந்துள்ளார் என பொலிசார் தெரிவித்துள்ளனர். இவர் கைதி செய்யப்படும் போது ஒரு பை நிறைய பெண்களின் உள்ளாடைகளை வைத்திருந்தாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment