Google Website Translator Gadget

ஆட்பதிவு திணைக்களத்தினாலும் பிரிக்க முடியாத இரட்டையர்

Tuesday, August 23, 2011

மனிதன் உலகில் பல கோலத்தில் பிறவி எடுப்பதாக கூறப்படுகின்றது. அது போல் அருமையாக காணப்படுவது இந்த இரட்டையர் பிறவி. அதிலும் இருவரும் ஒரே மாதிரியான உருவ அமைப்புக்களை கொண்டவர்களாக இருந்தால் அவர்களை அடையாளம் காண்பதும் கடினம் தான்.

இந்த கடினத்தில் மாட்டியுள்ளது ஆட்பதிவுத் திணைக்களம். விடயத்திற்கு வருகின்றேன். கடந்த வருடம் செப்டம்பர் 2010ம் ஆண்டு வழங்கப்பட்ட அடையாள அட்டைகளுக்கான இலக்கங்கள் இருவருடைய இலக்கமும் ஒரே இலக்கமாகும். அதாவது 938121770 V என்பதே அதன் இலக்கமாகும்.


இந்த அடிப்படையில் இந்த இரு அடையாள அட்டையின் உரிமையாளர்களாவன பெலிகன்கனமகே மல்கி திசானி சேனநாயக்க மற்றும் பெலிகன்கனமகே திலிக்ஸ் சேனநாயக்க என்பதாகும். இவர்கள் இருவரும் இரட்டையரகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு காணப்பட்ட விடயத்தினை ஆட்பதிவு திணைக்களத்திற்கு அறிவித்து ஒரே நாளில் புதிதாக இரு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. என்ன புதிமை அந்த இரு இலக்கங்களும் ஒரே இலக்கம் என்பது தான் இங்குள்ள விநோனதம்.
நிச்சியமாகவே இரட்டையார்களாக பிறப்பவர்கள் நிச்சயமாகவே ஒருவர் திறமையாளியாகவோ அல்லது முயற்சியாளர்களாவே இருந்தால் அந்தப் பயனை இருவரும் அடைந்து கொள்ள முடியும் என்பதில் ஐயமில்லை.
யாருக்காவது இரட்டைக் குழந்தைகள் இருந்தால் இந்த சிககலைப்பயன்படுத்தி உங்கள் பிளளைகளின் எதிர்காலத்தை வெளிச்ச ஊட்டமுடியும். அதாவது ஆள்மாறாட்டத்தின் மூலமாக. ஒருவர் ஒருவருடம் பரீட்சை எழுதி சித்தியடைந்த பின்னர் மற்றை பலயீனமானவருக்கு ஆள்மாறாட்டம் செய்தல் இருவருக்கு வெற்றி நிச்சயம் அதைத்தான் இந்த கணனி விட்ட தவறை அவதானிக்கும் நான் உணர்கின்றேன். 

0 comments:

Post a Comment

 
 
 

Followers

Subscribe!