விஞ்ஞானத்துறையின் முன்னேற்றங்கள் மேலோங்கிச் செல்லும் போது அவை சார்ந்த துறைகளும் விரிவடைந்து செல்வது இயல்புதான். இன்று உலகில் ஆணா, பெண்ணாக்குறான், பெண்ணை ஆணாக்கும் இவ்வாறு பல்வேறுபட்ட விடயங்கள் நாளாந்தம் நடந்த வண்ணம் உள்ளன. இந்த வகையில் எனது நாடான இலங்கையிலும் இவ்வாறான முயற்சியில் வைத்தியர்கள் இறங்கியுள்ளார்கள்.
அதாவது ஆண்களுக்குரிய ஹோமோன்களை பெண்களுக்கு செலுத்தி அதன் ஊடாக ஒரு ஆணை உருவாக்குவது போன்ற முயற்சியாகும். மேலும் விரிவாகச் சொல்லப் போனால் ஆண்களுக்குரிய ஹோமோங்களுடன் பெண்ணாய்ப் பிறந்த எட்டு வயதுச் சிறுமியை பெண்களுக்குரிய ஹோமோன்கள் உள்ளவராக மாற்றும் முயற்சியாகும். இந்த சத்திரசிகிச்சை தற்போது லேடி ரிட்ஸ்வே வைத்தியசாலையில் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக அந்த வைத்தியசாலை வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நடவடிக்கையினை நெறிப்படுத்திக் கொண்டியிருக்கிறார் இலங்கையைச் சேர்ந்த வைத்தியர்களும் இவர்களுடன் இணைந்து வெளிநாட்டு வைத்தியர்களுமாகும்.
இந்த சத்திர சிகிச்சை வெற்றியளித்தால் மேலும் பல சிகிச்சைகளை இலங்கையில் மேற்கொள்ள முடிவதுடன் இவ்வாறான மேலும் இதனை மேற்கொள்ள 8 மணித்தியாலங்கள் எடுக்கக்கூடுமென வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன் அக்குறைபாடுகளுடன் வருடாந்தம் 500 மேற்பட்ட குழந்தைகள் பிறப்பதாக அறிக்கைகள் குறிப்பிடுவதாகவும் அந்த வைத்தியசாலையின் பணிப்பாளர் ரத்ணசிறி ஹேவக்கே தெரிவித்தார்.
0 comments:
Post a Comment