ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமான முறையில் படுகொலைகள் பஞ்சமில்லாமல் நடைபெற்று வருகின்றது என்பதை நான் சொல்லி நீங்கள் அறி்ந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை என நான் எதிர்பார்க்கிறேன்.
நான் பல நாள் சொல்ல வேண்டும் என்ற ஒரு முக்கிய விடயம் இன்று தான் கண்ணில் பட்டது. ஆகவே, என்னை அறியாமலே இந்த இணையப் பக்கம் வந்தவுடன் அது எனக்கு ஞாபகத்திற்கு வந்திருக்கு...........!
அது என்னவென்று உங்களுக்கு புரியும் படியாகச் சொல்றேன். நான் பாடசாலையில் கற்கும் போது எங்களுக்கு ஆங்கிலம் கற்பிப்பிப்பாங்க நாங்க ஏனோ தானோ நமக்கு ஏன் வீண் வம்பு என்று என்னுடைய காலத்தை கடத்தி ஏதோ இரண்டு பட்டத்தையும் பெற்று இப்ப நான் அரசாங்க பாடசாலையிலே உதவி அதிபராக கடமையாற்றுகிறேன்.
எங்க நாட்டில சிங்களமும், தமிழ் அரச கரும மொழியாக இருந்தாலும் ஆனால் ஆங்கில மொழியின் செல்வாக்கு அதிகம், அதனாலே என்னோட பாடசாலை தொடர்பான பல்வேறுபட்ட கடிதங்கள் என்னோட பாடசாலையில கற்பித்துக் கொண்டிருக்கிற ஆசிரியர், ஆசிரியை கொஞ்சம் தயவு பண்ணி கோட்டு கடிதம் ஒன்று எழுதித் தரச் சொல்லுவேன்.
ஏன் நீங்கள் என்றால் ஆங்கிலத்தில் வித்திவானா தாய்மொழி உங்களுக்கு தவங்கி தவங்கிப் போகும் அதாவது தமிழ் அப்போ, எப்படி !
எங்கட தமிழ் மொழிக்கு செம்மொழி கிடைச்ச இராசியோட உலகத்தில அதற்கு தனிச்சிறப்புத் தான். அதற்கு அப்படி என்ன தனிச்சிறப்பு என்று கேட்கிறது எனக்குப் புரிகிறது
இப்போது கூக்கிளின் மொழிபெயர்ப்பு மொழியில் தமிழும் ஒரு மொழியாக சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் எங்களுக்கு பல்வேறுபட்ட நன்மைகள் கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன். அதாவது பல மொழி தெரிந்தவர்களும் இதனைப்பயன்படுத்தி எமது ஆக்கத்தை வாசிக்க முடியும் கட்டுரை வடிவில் உள்ள பல்வேறு கட்டுரை, அப்பப்பா !.......................
எத்தனையோ பயன்கள், பாடசாலை மாணவர்கள் தொடக்கம் பல்கலைக்கழ மாணவர்கள் வரை இந்த வசதியை பெற்றுக் கொள்ள முடியுமல்லவா,
கிட்டத்தட்ட 45 மொழிக்கு மேற்பட்ட அமைப்பில் எங்கள் ஆக்கத்தினை மொழிபெயர்த்து வாசிக்க முடியும் என்றால் அது சின்ன விடையமாக கொள்ள முடியாது.
மேலே என்னுடைய தளத்தையும் மொழிபெயர்க்கும் முகமாக நானும் ஒரு GOOGLE WEBSITE TRANSLATOR GADGET ஒன்றை இணைத்துள்ளேன். இதன் ஊடாக நீங்களும் இணைத்து அல்லது சென்று பயனைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
இங்கே கிளிக் பண்ணவும்
இது போன்ற மெனு உங்களுக்குத் தோன்றும் அதில் Add to Blogger என்பதை கிளிக் பண்ணியவுடன் உங்களுடைய Blogger ரில் சேர்நது விடும் இதனை நீங்கள் விரும்பியவாறு உங்களுடைய இணைத்துக் கொள்ள முடியும்.
இனி யாராவது உங்கள் தளத்திற்கு வந்து அவர்கள் விரும்பிய மொழிகளில் மொழிபெயர்த்து வாசிக்க முடியும்.
நீங்கள் விரும்பினால் இந்த ஆக்கத்தை ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்து வாசித்துப் பாருங்கள்
நீங்கள் விரும்பினால் கீழ் காணப்படும் லிங் படங்களையோ அல்லது வாக்கியளித்து எனது ஆக்கத்தை முன்னுருமைப்படுத்துங்கள்
0 comments:
Post a Comment