இலங்கைத் தீவில் அண்மைக்காலங்களில் ஏதோ ஒரு விநோதமான செய்திகள் பரவிய வண்ணம் காணப்படுகின்றன. அது உண்மையா? அல்லது பொய்யா? என யாராலும் நிறுவிக்கப்படாத விடயங்களாத்தான் காணப்படுகின்றன்.
குறிப்பிட்டு சொல்லப்போனால் சனல் -4 விடயம், தற்போது மர்ம கிறீஸ் மனிதர்கள் என அந்தப் பட்டியல் நீண்டு கொண்டு தான் செல்லுகின்றன எனலாம்.
இந்த நிலமைகளை அவதானிக்கும் போது யுத்தம் முடிந்த நிம்மதி மூச்சி விட்டாலும் சில சில நெருக்கடிகளுக்கு இலங்கைத் தீவுமக்கள் முகம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதில் ஐயமில்லை.
நான் இப்போது அந்த மர்மம கிறீஸ் மர்மத்திற்கு வருகின்றேன். இது தொடர்பாக பல்வேறுபட்ட செய்திகள் நாளுக்கு நாள் பத்திரிகை, தொலைக்காட்சி போன்றவற்றில் சொல்லப்பட்டாலும் இந்த விடயத்தில் ஏதாவது உண்மைகள் உண்டா என நான் சொல்லும் விடயத்தில் இருந்து நீ்ங்கள் முடிவினை எடுத்துக் கொள்ள வேண்டும்.
இந்த இலங்கைத்தீவின் மாவட்டங்களான இரத்தினபுரி, பதுளை, அம்பாறை, மட்டக்களப்பு, பொலநறுவை, கண்டி, நுவரெலியா போன்ற மாவட்டங்களில் இந்த மர்ம கிறஸ் மனிதனின் நடமாடட்ம் இருப்பதாக ஆதாரங்கள் கூறுகின்றன.
இரத்தினபுரியின் ஹவத்தை என்னும் பிரதேசத்தில் நடைபெற்ற 7 மர்மக் கொலைகளை மையப்படுத்தி இந்த மர்மக் மனிதர்கள் மற்றும் பேய்கள் தொடர்பான இந்த செய்தியை உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன். தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பான பீதிகள் மக்கள் மத்தியில் ஆரம்பிக்கத் தொடங்கியது என நான் இங்கு ஆரம்பிக்கிறேன்.
07.08.2011 ஆந் திகதியன்று கம்பளை ஆண்டிகாவத்தையில்பகுதியில் 28 வயதுடைய பெண்ணை இந்த மர்ம மனிதன் தாக்கியதால் இந்த மாது தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இது போன்று நுவரெலியா பம்பரகந்தை தோட்டத்திலும் ஒரு வீட்டை மர்ம மனிதர்கள் தட்டியாதாகவும் செய்திகள் கூறுகின்றன.
அத்துடன் பதுளை மாவட்டத்தில் உள்ள பசறையில் உள்ள 3ம் மைல்கல் என்னும் இடத்தில் 30 வயதுடைய ஒரு மாது தாக்கப்பட்டு அவர் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றார்.
அதே வேளை லிந்துவெல தலாவக்கல்லை என்றும் பகுதியில் இந்த மர்ம மனிதன் பெண் ஒருவரின் தலைமுடியை கத்திரித்தாகவும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் அம்பாறை மாவட்டத்தில் உள்ள இறக்காமம் என்னும் ஒரு முஸ்லிம் கிராம்த்தில் தனது மர்ம வித்தைகளை காட்ட வந்த மனிதனை பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்த போது அவர் ஒரு மனநோயாளி என பொலிஸார் அவனை பின்னர் விடுவித்ததால் அங்கு உள்ள பொது மக்களும், பொலிஸாருக்மிடையில் முருகல் நிலை ஏற்பட்டதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.
மேலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் கிராமமமான வாழைச்சேனையில் பெண் ஒருவர் தாக்கப்பட்டு காயங்களுக்கு உள்ளாக்கப்படட்ார என்பதையும் நான் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். அந்த மர்ம மனிதனை பிடித்து பொலிஸில் ஒப்படைத்த போது அவனை பொலிசார் விசாரணை செய்யாமல் விடுதலை செய்தாதாக செய்திகள் பரவியதை அறிந்த பொதுமக்கள் பொலிசாருடன் மோதியதையும் நான் இங்கு குறிப்பிட வேண்டும்.
மேலும் இந்த மர்ம மனிதனின் மரமம் தொடர்கின்றது.
இவைகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வாழைச்சேனை நாவலடியில் நடைபெற்ற சம்பவ்களாகும் மர்ம மனிதனால் தாக்கப்பட்டு காயமடைந்த மாதுவும் அதனை தொடர்ந்து நடைபெற்ற வன்முறை (பொலிசார் - பொதுமக்கள்)
காயமடைந்த மாது வைத்தியசாலையில் அனுமதிக்கபட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம்
மேலே சொல்லப்படட் விடயங்களுக்கு ஆதரவு தரும் காணோலிகள் மற்றும் புகைப்படங்கள் உங்களுக்கு இங்கு தரப்பட்டுள்ளன.
0 comments:
Post a Comment